செய்திகள் :

"நாங்கள் அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்ட முதல்வர்கள்" - திமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பளீச்

post image

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். அந்த வகையில், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க-வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அப்போது, ``இந்த உலகத்தை ஒன்பது கோள்கள் இயக்குகின்றன. அதில் சக்தி வாய்ந்த சூரியன் சின்னத்தை பேரறிஞர் அண்ணா அன்று அறிவியல் பூர்வமாகத் தேர்ந்தெடுத்தார். இன்று அதே உதயசூரியன் சின்னத்தில் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்கத் தயாராகிவிட்டனர்.

அநியாயத்திற்கு தமிழகம் தலைகுனியாது என்பதால், மு.க. ஸ்டாலின் இரண்டாம் முறையாக முதலமைச்சராக வருவது உறுதி. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், அம்மா, இப்போது ஸ்டாலின் இவர்கள் எல்லோரும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.

நான் உட்பட மற்றவர்கள் எல்லோரும் அப்பாயிண்ட்மென்ட் செய்யப்பட்டவர்கள். நன்றிகெட்ட அரசியல்வாதி இந்த உலகத்திலேயே எடப்பாடி பழனிசாமிதான். தேர்தலில் என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்று உதயகுமார் போன்றவர்கள் திட்டமிட்டனர்.

6 சட்டமன்றத் தொகுதிகளில் சதி செய்தார்கள். ஆனால் என்ன நடந்தது? இன்று அவர்களே டெபாசிட் இழந்து நிற்கிறார்கள். அ.தி.மு.க-வை இன்று குழி தோண்டிப் புதைத்துக்கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமிதான். கடப்பாறை எடுத்து கட்சியைப் புதைத்த பெருமை அவரையே சாரும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நான் எடப்பாடி பற்றிப் பேசக் கூடாது என உதயகுமார் எச்சரிக்கிறாராம். என்னை எச்சரிக்க இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் ஒரு சாதாரணத் தொண்டன். மாநாட்டில் கூட 200-க்கும் மேற்பட்டோர் என்னுடன் நின்றனர். நான் தளபதி வாழ்க என்று சொன்னேன். பதவிக்காக நான் அலைபவன் அல்ல. எடப்பாடி பழனிசாமி தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையெனில் வரலாறு அவரை மன்னிக்காது" என்றார்.

`அப்செட்டான ரஜினி; டெல்லி கொடுத்த சிக்னல்' - அறிக்கைக்கு பின்னால் நடந்த அரசியல்!

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”என்கிற வரிகளோடு ரஜினி வெளியிட்ட அறிக்கைக்கு பின்னால் பல்வேறு அரசியல் நகர்வுகள் சத்தமில்லாமல் நடந்துள்ளது. ஆதவ் அர்ஜூனா கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் ர... மேலும் பார்க்க

`போதைப் பொருள்கள் விற்கும் சந்தையாக தமிழ்நாட்டை திமுக மாற்றி விட்டது' - டி.டி.வி.தினகரன் தாக்கு!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சிகள் இணைந்து, தமிழ்நாட்டில் நிலவும் பாலியல் கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களைத் தடுக்க தவறியதாக... திமுக அரசைக் கண்டித்து ஆ... மேலும் பார்க்க

அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் நூலிழையில் தப்பிய மொஜ்தபா; `அன்று' நடந்தது என்ன? - வெளியான தகவல்!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படை கடந்த மாதம் 28ம் தேதி காலை நேரத்தில் ஈரானில் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் அலிகமேனி மற்றும் அவரது குடும்பத்தில் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துவிட்டனர். அ... மேலும் பார்க்க

நெல்லை: காட்டுச் சாலையில் எரிந்து கிடந்த கார் - கருகிக் கிடந்த 4 உடல்களால் அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைக்குளம் - ஆற்றங்கரை பள்ளிவாசல் சாலையில் கார் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது... மேலும் பார்க்க

``எனக்கு `அந்த' நடிகை வேண்டும் எனக் கேட்டால்.!" - சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு

விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்து சி.வி ... மேலும் பார்க்க

`தாமரை மலர்ந்துவிட்டது… உங்கள் தயவு எங்களுக்கு தேவையில்லை!’ – முதல்வர் ரங்கசாமியை ஓரம் கட்டும் பாஜக

`லாட்டரி சார்லஸ் மார்ட்டின் வேண்டாம்’புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச... மேலும் பார்க்க