செய்திகள் :

"நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள்; ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம்" - டிடிவி தினகரன் குறித்து இபிஎஸ்

post image

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது.

அதிமுக பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொண்டன.

இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

NDA கூட்டணி
NDA கூட்டணி

பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக தலைவர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.

இச்சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருப்பதால் என்டிஏ கூட்டணி பலம்பெற்றிருக்கிறது. தமிழகத்தில் வலிமையான கூட்டணி எங்களுடையதுதான்.

நானும்-டிடிவி தினகரனும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். நாங்கள் அம்மா (ஜெயலலிதா) வளர்த்த பிள்ளைகள். ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம்.

எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், நாங்கள் ஒன்றாக எப்போது இணைந்தோமோ.. அப்போதே அனைத்தையும் மறந்துவிட்டோம்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

இனி அம்மா விட்டுச் சென்ற பணியைத் தொடர வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சியை அகற்ற வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்" என்று பேசியிருக்கிறார்.

நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02

1980 தேர்தல்அரசியல் ஆடுபுலி 02நண்பர்களாக இருந்த கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் அரசியலில் எதிரும் புதிருமாக மாறியதால், இன்று வரை அதிமுக – திமுக என்ற அரசியலே தமிழகத்தில் நிலைத்திருக்கிறது.திரைத்துறையி... மேலும் பார்க்க

தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் கமலின் ம.நீ.ம! - நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னும் அங்கீகாரம் பெறாத சில கட்சிகள், மாநிலம் முழுவதும் பொதுச் சின்னம் க... மேலும் பார்க்க

"சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்" - பிரதமர் மோடி கேரண்டி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அம்ருத் பாரத் ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார். பின்னர் திருவனந்தபுரம் புத்தரிகண்ட மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டா... மேலும் பார்க்க