செய்திகள் :

"நாடாளுமன்றத்தை 'லப்பர் ஸ்டாம்ப்' ஆக்கும் சதி" - சிறப்பு கூட்டத்தொடர் குறித்து பா.சிதம்பரம் காட்டம்

post image

மத்திய அரசு ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதோடு, தொகுதி மறுவரையறைப் பணியையும் அமைதியாகத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரம் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அப்போது, ``மத்திய அரசு ஏப்ரல் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த மார்ச் 26-ம் தேதி காங்கிரஸ் தலைவருக்குக் கடிதம் வந்தது. அப்போதே, `கடந்த 30 மாதங்களாக அமைதியாக இருந்துவிட்டு, இப்போது அவசரமாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவது ஏன்?' என்ற கேள்விக் கேட்டு பதில் அனுப்பப்பட்டது.

மேலும், இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

ஆனால், இந்தக் கோரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அரசு நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தை அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் மிக முக்கியமான இரண்டு மசோதாக்கள் கொண்டுவரப்படலாம் என டெல்லி அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவுகின்றன.

தற்போது 543 ஆக இருக்கும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% உயர்த்தி 816 ஆக மாற்றுவது. தொகுதிகளை மறுவரையறை செய்வது ஆகிய மசோதாக்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய அரசியல் சாசனத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

திருச்சியில் பிரதமர் மோடி
திருச்சியில் பிரதமர் மோடி

இந்தக் கூட்டத்தொடரின் கால அளவு ஒரு மிகப்பெரிய அரசியல் சதி. தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க-விற்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழ்நாடு, மேற்கு வங்க மக்களவை உறுப்பினர்கள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்கும்போது, அவர்களை அவைக்கு வரவிடாமல் தடுப்பதே அரசின் நோக்கம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தேர்தல் பணிகளை விட்டுவிட்டு உறுப்பினர்கள் டெல்லிக்கு வருவது இயலாத காரியம் என்பதால், அவர்களின் வாக்குகள் இன்றி மசோதாவை நிறைவேற்ற அரசு முயல்கிறது.

தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் தென் மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் இன்னும் நசுக்கப்படும் என்ற பேராபத்தும் இருக்கிறது. உதாரணமாக, உத்தரப்பிரதேசத்தின் பலம் 80-லிருந்து 120 ஆக உயரும்போது, தமிழ்நாடு + புதுச்சேரி பலம் 40-லிருந்து 60 ஆக மட்டுமே உயரும். இதனால் மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து, தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். மேலும், உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஒவ்வொருவருக்கும் பேசக் கிடைக்கும் நேரம் வெகுவாகக் குறைந்து, நாடாளுமன்றம் ஒரு 'ரப்பர் ஸ்டாம்பாக' மாறும் நிலை ஏற்படும்.

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

இந்த நடவடிக்கை அரசியல் சாசன மோசடி. வெறும் விவாதத்திற்காகவே சபை கூட்டப்படுகிறது என்றால், தேர்தல் முடிந்த பிறகு ஏப்ரல் 29-ம் தேதி கூட்டத்தொடரை நடத்தலாம். தேர்தல் நெருக்கடியில் அவசர அவசரமாக மசோதாக்களை நிறைவேற்ற முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதால், இந்த விபரீதத்தை மக்களிடம் கொண்டு செல்ல காங்கிரஸ் முடிவு செய்துள்ளது" என்றார்.

நெருக்கும் திமுக... சட்டமன்றத் தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்குகிறாரா திருமாவளவன்?

2026 சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறேன் என வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில், அந்த முடிவை தி.மு.க ரசிக்கவில்லை என்கிறார்கள் வி.சி.க-வினர். தேர்தலில் ... மேலும் பார்க்க

'சினிமாவிலிருந்து அரசியலுக்கு' - மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கிய சுந்தர். சி |Photo Album

மதுரை களமிறங்கிய நடிகர் சுந்தர் சிமதுரை களமிறங்கிய நடிகர் சுந்தர் சிமதுரை களமிறங்கிய நடிகர் சுந்தர் சிமதுரை களமிறங்கிய நடிகர் சுந்தர் சிமதுரை களமிறங்கிய நடிகர் சுந்தர் சிமதுரை களமிறங்கிய நடிகர் சுந்தர... மேலும் பார்க்க

நாகர்கோவில்: "தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாகப் பேசி வருகிறார்" - ஸ்டாலின் பேச்சு

நாகர்கோவிலில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைவரும் சூரிய உதயத்தைப் பார்க்க மக்கள் எல்லாம் வரக்கூடிய மாவட்டம் கன்னியாக... மேலும் பார்க்க

கருணாநிதி, ஜெயலலிதா ராஜினாமா; அதிமுகவின் அசுர பாய்ச்சல், அனுதாப அலையால் வீழ்ந்த திமுக | 1991 ஆடுபுலி

அரசியல் ஆடுபுலி 12புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாமா? என்று அரசியல் விவாதங்கள் நடக்கின்றன. இதற்கு முன்னதாக, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக... மேலும் பார்க்க

"நீண்ட நாள்களுக்கு முன்பே கட்சித் தலைமைக்குச் சொல்லிவிட்டேன்" - ஊகங்களுக்கு விளக்கமளித்த அண்ணாமலை

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளரின் பட்டியல் நேற்று வெளியானது. அதில் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. கோவை சிங்காநல்லூர... மேலும் பார்க்க