செய்திகள் :

"நான் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைச்சராக இருந்தேன்; எனக்கு எம்எல்ஏ ஆக விருப்பமில்லை!" - திருநாவுக்கரசர்

post image

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,

"விஜய் NDA கூட்டணியில் சேருவாரா என்பது எனக்கு தெரியாது. தெரியாமல் கருத்து கூற முடியாது. தி.மு.க தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். ஆனால், விஜய் NDA கூட்டணியில் சேராத நிலையில் அது குறித்து கருத்து கூற முடியாது. தி.மு.க -காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது. ஏற்கனவே, கூட்டணி முடிவு செய்யப்பட்டு, எத்தனை தொகுதிகள் என்பது இறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே, மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. கோவையில் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கேட்கிறீர்கள். இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் நடந்த அந்த சம்பவம் பெரும் கண்டனத்திற்குரியது. இந்த ஒரு சம்பவத்தை வைத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரி இல்லை என்று கூறக்கூடாது.

thirunavukarasar

நான் எம்.ஜி.ஆர் காலத்தில் அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்தேன். பா.ஜ.க-வில் மத்திய மந்திரி ஆக இருந்தேன். எனக்கு எம்.எல்.ஏ ஆக விருப்பமில்லை. ஆனாலும் ,காங்கிரஸ் தலைமை, தொண்டர்கள் விரும்பினால் போட்டியிடுவேன். எனது மகன் ராமச்சந்திரன் ஏற்கனவே அறந்தாங்கி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அந்த தொகுதி காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டால் மீண்டும் அதே தொகுதியில் ராமச்சந்திரன் போட்டியிட வாய்ப்பு உள்ளது" என்றார்.

வட கொரியா தேர்தலில் Kim Jong Un வெற்றி; ஆனால், மக்கள் கொடுத்த 'அதிசய' ட்விஸ்ட் - அது என்ன?

ஒவ்வொரு நாட்டு அரசியலிலும் தேர்தல் மிக மிக முக்கியம். உலக நாடுகளில் இருந்து சற்று மாறுபட்ட 'ஸ்டைலில்' வட கொரியாவில் ஆட்சி இருந்தாலும்... நடந்தாலும், அங்கேயும் கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்... மேலும் பார்க்க

தவெக-வுடன் கூட்டணிக்கு தயாராகும் என்.ஆர்.காங்கிரஸ்? - ரங்கசாமியின் `கிரீன்’ சிக்னலால் தவிக்கும் பாஜக

`கோதாவரி கோட்டைக் கிழி...’புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது. அடுத்து வந... மேலும் பார்க்க

ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; 'தானே' களத்தில் இறங்கிய அமெரிக்கா

அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களுக்கு எதிராக தொடுத்துள்ள போருக்கு ஈரானின் முக்கிய எதிர்வினை 'ஹார்முஸ் ஜலசந்தி' மூடல். இந்த ஜலசந்தி மூடலால் உலகளவில் பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை சரிசெய்ய அமெரி... மேலும் பார்க்க

``திமுக-வினர் வேண்டுகோள் விடுத்தார்களே தவிர கட்டளையிடவில்லை.!' - இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இந்திய கம்யூனிஸ்ட்- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தவகையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறத... மேலும் பார்க்க

Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்?

ஈரான் போர் தொடக்கத்தின் முதல் நாளிலேயே (பிப்ரவரி 28), அந்த நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொலை செய்யப்பட்டார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தச் செயலுக்கு தொடர்ச்சியாக கடும் எதிர்வினையாற்றி வந்தார் அலி ல... மேலும் பார்க்க