செய்திகள் :

`'நான் மட்டும் தலையிடவில்லை என்றால் பாக். பிரதமர் இறந்திருப்பார்' என்றனர்' - மீண்டும் ட்ரம்ப்

post image

இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போரைத் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருக்கிறார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய ட்ரம்ப், "உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை நாங்கள் பெருமையுடன் மீட்டெடுத்து வருகிறோம்.

இந்திய பிரதமர் - பாகிஸ்தான் பிரதமர்
இந்திய பிரதமர் - பாகிஸ்தான் பிரதமர்

எனது முதல் 10 மாத பதவிக்காலத்தில் 8 போர்களை நிறுத்தி இருக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் போரில் என்னுடைய தலையீடு இல்லாமலிருந்திருந்தால் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார் என்று 35 மில்லியன் மக்கள் என்னிடம் சொன்னார்கள்.

இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதப் போர் வெடித்திருக்கும். அதை நான் தடுத்து நிறுத்தினேன்.

ஒன்பதாவது போரை முடிவுக்குக் கொண்டுவர எனது நிர்வாகம் மிகவும் கடினமாக உழைத்து வருகிறது.

ரஷியா - உக்ரைன் இடையிலான படுகொலை, நான் அதிபராக இருந்திருந்தால் ஒருபோதும் நடந்திருக்காது" என்று கூறியிருக்கிறார்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

இருநாடுகளிடையேயான நேரடிப் பேச்சுவார்த்தை மூலமே போர் நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.

தோழர் நல்லகண்ணு : ``அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்புவோம்" - முதல்வர் ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு சிகிச்சை பலனின்றி இன்று (25.02.2026) மதியம் 1.55 மணியளவில் காலமானார். தோழர் நல்லக்கண்ணு மறைவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெ... மேலும் பார்க்க

நல்லகண்ணு: "நேர்மையும் தியாகமும் சுமந்த அவரது வாழ்க்கையை ஆவணமாக்க விரும்பினேன்" — உருகும் வ.கௌதமன்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், எழுத்தாளர், ஒடுக்குமுறைகள், அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்தவர் தோழர் ஆர்.நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ் மாநிலச் செயலாளர். எதிர்க்கட்சிக்க... மேலும் பார்க்க

அறம்... நேர்மை.. நம்பிக்கை! எளிய மக்களின் `தோழர்' நல்லகண்ணு | வாழ்க்கை பயணம்

1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி... நூற்று ஒரு ஆண்டுகளுக்கு முன் வடக்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய அதே நாளில், தென்கோடியில் உதித்தது இரா.நல்லகண்ணு என்ற ஒளி நட்சத்திரம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி... மேலும் பார்க்க

சிறைவாசம் முதல் செங்கொடி வரை: காலமானார் தோழர் நல்லகண்ணு

தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டத்தைச் சேர்ந்தவர் இரா.நல்லகண்ணு. ராம பக்தரான தந்தைக்கு மகனாகப் பிறந்தாலும், இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மக்கள் பணியில் தன்னை இணைத்துக்கொண்ட... மேலும் பார்க்க