அன்பார்ந்த வேட்பாள பெருங்குடி மக்களுக்கு... நடப்பு அரசியல் கண்டு அழும் வாக்காளனி...
`நாம் நேரு அண்ணனுக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்'- உணர்ச்சிவசப்பட்ட நிர்வாகி; மைக்கை வாங்கிய கே.என்.நேரு
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வெற்றி பெற்றுள்ளார்.
தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த பொதுமக்களுக்கு அவர் நன்றி சொல்லி வருகிறார். அந்த வகையில், காஜாமலை பகுதியில் கே.என்.நேரு திறந்த வேனில் நின்றபடி நன்றி தெரிவித்து வந்தார். அப்போது, கே.என்.நேரு அருகில் நின்ற தி.மு.க பிரமுகர் காஜாமலை விஜி மைக்கில் பேசினார்.

அதில், 'நம்ம ஊரும், நாமும் நேரு அண்ணனுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டுள்ளோம்' எனக் கூறியபோது விஜிக்கு தொண்டை அடைத்து மேடையிலேயே கண்ணீர் விட்டு அழத் தொடங்கியதால், அருகில் இருந்த கே.என்.நேரு சட்டென அவரது கையில் இருந்த மைக்கை வாங்கினார்.
அதோடு, மைக்கை அணைத்து கீழே வைத்த கே.என்.நேரு, வாகனத்தை உடனே கிளப்புமாறு உத்தரவிட்டார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.















