செய்திகள் :

நீலகிரி: குன்னூரில் 215 மி.மீ, கோத்தகிரியில்‌ 114 மி.மீ; இரவோடு இரவாகக் கொட்டித் தீர்த்த கனமழை!

post image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகக் கடுமையான உறைபனி நிலவி வந்த நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

நேற்று காலை முதல் மந்தமான காலநிலை நிலவி வந்த நிலையில், இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழைப்பொழிவு தொடங்கியது.

மழை பாதிப்பு
மழை பாதிப்பு

குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 215 மி.மீ, கோத்தகிரியில் 114 மி.மீ , குன்னூர் புறநகர் 90 மி.மீ என மாவட்டத்தில் 980.6 மி.மீ மழை ஒரே இரவில் பதிவாகியுள்ளது.

கனமழைப்பொழிவு காரணமாக குன்னூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குன்னூர் உழவர் சந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 2 கார்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளன. மாடல் ஹவுஸ் பகுதியில் சில குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.

மலை ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவால் குன்னூர் - ஊட்டி இடையே மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலையின் குறுக்கே விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழை பாதிப்பு
மழை பாதிப்பு

குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 12 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜே.சி.பி இயந்திரங்களின் உதவியுடன் மண் குவியல்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

குன்னூரில் உள்ள நீரோடைகளில் அதிகரித்து வரும் கட்டுமான ஆக்கிரமிப்புகள் மற்றும் முறையான பராமரிப்பின்மை காரணமாகவே குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்து வருவதாக உள்ளூர் மக்கள் சிலர் கூறுகின்றனர்.

நீலகிரி: காலநிலையில் திடீர் மாற்றம்; இருளில் மூழ்கிய நகரம்; முடங்கிய‌ போக்குவரத்து | Foggy Clicks

சாலையில் விழுந்த மரம் சாலையில் விழுந்த மரம் சாலையில் விழுந்த மரம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பன... மேலும் பார்க்க

ஊட்டி: பகலில் இருள் சூழ்ந்து காணப்பட்ட நகரங்கள் - பனி மூட்டத்தால் முடங்கிய போக்குவரத்து!

குளிர்ந்த கடல் காற்று கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசுவதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மழைப்பொழிவு மற்றும் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில்... மேலும் பார்க்க

Rain: கரையைக் கடந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் கரையை கடந்துவிட்டதாகவும், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ... மேலும் பார்க்க

வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை! சென்னையிலும் கனமழை - எப்போது?

இந்த வாரத்தில் மூன்று நாள்கள் தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகு... மேலும் பார்க்க