செய்திகள் :

"'நீ இங்க வரவேணாம்; வேற கட்சிக்குப் போ'னு சொல்லிருக்கணும்; ஆனா..." - திமுகவை விமர்சிக்கிறாரா திருமா?

post image

தர்மபுரியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியபோது, "நான் ஒருபோதும் கட்சியிலிருந்து யாரையும் வெளியேற்ற வேண்டும் என்று எண்ணியதில்லை. சிலர் விசிகவை எப்படியாவது சிதறடிக்க வேண்டும். பலவீனப்படுத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் இப்போது ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். ஒரு தம்பி கட்சியில் சேர விரும்பினால், 'நீ இங்க வரவேண்டாம்பா. வேற ஏதாவது கட்சிக்கு வேணா போயிடுங்க. விசிகவோடு நாங்கள் நீண்ட காலம் பயணித்திருக்கிறோம். எங்களுக்காக அவர்கள் துணை நின்றார்கள். அவர்களைப் பலவீனப்படுத்த இடம் தரமாட்டோம்' என அந்தக் கட்சி சொல்லி இருக்க வேண்டும். அதுதான் அரசியல் அறம்.

திருமாவளவன், ஸ்டாலின்
திருமாவளவன், ஸ்டாலின்

ஆனால் எங்களாலும் விசிகவைப் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். நீண்ட நெடிய பாரம்பர்யம் கொண்ட இயக்கம் எடுத்த முடிவு என் இதயத்தில் முள் குத்தியதைப் போல் வலியை ஏற்படுத்தியது.

லட்சக்கணக்கான தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தில் நூற்றுக்கணக்கான கருத்தியல் சார்ந்த படை தளபதிகள் வலிமையுடனும் பற்றுதலுடனும் இருக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலின்போது பனையூர் பாபுவுக்கு விசிகவில் சீட் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த பனையூர் பாபு கடந்த ஜூன் 7 ஆம் தேதி திமுகவில் இணைந்தார். இவரைத்தான் திருமாவளவன் குறிப்பிடுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

``உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க-வுக்கு மக்கள் சங்கு ஊதுவார்கள்!” - ராஜேந்திர பாலாஜி காட்டம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “எடப்பாடி ப... மேலும் பார்க்க

ட்ரம்பின் வலதுகரம்; ஈரான் மீதான போரின் முக்கியஸ்தர்! - திடீர் மரணமடைந்த லிண்ட்சே கிரஹாம் யார்?

குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும், அதிபர் டொனால்டு ட்ரம்பின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவருமான செனட்டர் லிண்ட்சே கிரஹாம், தனது 71வது வயதில் திடீரென காலமானார். திடீர் உடல்நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

``ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் இந்த ஆட்சி நீடிக்காது.!" - அதிமுக ராஜேந்திர பாலாஜி சொல்வது என்ன?

சிவகாசி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ``இந்த நாடு உங்களுக்கென எழுதி க... மேலும் பார்க்க

அண்ணாமலையின் 'We The Leaders' மாநாடு: நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்னென்ன?

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி 'We The Leaders' என்ற இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் .அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளதாகச் சொல்லப்படுகிற... மேலும் பார்க்க

’We The Leaders அரசியல் கட்சியாக மாறுவது எப்போது?’ – அண்ணாமலை விளக்கம்

கோவை பொள்ளாச்சியில் ’வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் போதை இல்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.இம்மாநாட்டில் உரையாற்றிய அண்ணாமலை, “அமைப்பு துவங்கிய 38 நாட்களில் 19 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இத... மேலும் பார்க்க