செய்திகள் :

'நீ நல்லா சாப்பிட்டிருக்க' - புகார் செய்த பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன்

post image

பக்ரீத் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து வசதிகளை ஆய்வு செய்ய சென்றிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் பயணிகளிடம் நிலைமை புரியாமல் அடாவடியாக பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

சேலம் பார்த்திபன்
சேலம் பார்த்திபன்

போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபன் நேற்றிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ஆய்வு செய்வதற்காக வந்திருந்தார். முறையான பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த பயணிகள், போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் தங்களின் குறைகளை கூறினர். அப்போது ஒரு சில பயணிகளிடம் அமைச்சர் பார்த்திபன் அடாவடியாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இளைஞர் ஒருவர் தான் முன்பதிவு செய்திருந்த பேருந்து நேரம் கடந்தும் இன்னும் வரவில்லை என அமைச்சரிடம் கூறினார். அதற்கு உரிய பதிலை சொல்லாத அமைச்சர் பார்த்திபன் அந்த இளைஞரை நோக்கி, 'நீ நல்லா சாப்பிட்டிருக்க...நான் இன்னும் சாப்பிடல...நீ நல்லா சாப்பிட்டிருக்க நான் இன்னும் சாப்பிடல...' என எரிச்சலூட்டும் தொனியில் பேசியிருந்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்த இளைஞர், '10:45 மணி பேருந்தில் நான் டிக்கெட் புக் செய்திருந்தேன். 11:30 மணியை தாண்டியும் பேருந்து இன்னும் வரவில்லை. அதிகாரிகள் முறையாக பதில் சொல்லவில்லை. அமைச்சரிடம் கேட்டால் சம்பந்தமே இல்லாமல் 'நீ நல்லா சாப்பிட்டிருக்க' என்கிறார். சாப்பிட்டுவிட்டு வருவதும் சாப்பிடாமல் வருவதும் என்னுடைய விருப்பம். இதெல்லாம் ஒரு பதிலா?' என அதிருப்தியாக கூறினார்.

பயணியிடம் வாதிட்ட அமைச்சர்
பயணியிடம் வாதிட்ட அமைச்சர்

அதேமாதிரி, நகருக்குள் இருந்து கிளாம்பாக்கத்துக்கு முறையாக பேருந்து இல்லை எனக் கூறிய பயணியிடமும் நீண்ட நேரமாக அவர் சொல்வதை சரியாக புரிந்து கொள்ளாமல் வாதம் செய்து கொண்டிருந்தார். இது போன்று பேசிவிட்டு கடைசியில், 'குறைகள் இருந்தால் சொல்லுங்கள். நிறைகள் ஆக்கிக் கொள்கிறோம்' எனக் கூறியிருக்கிறார்.

கிளாம்பாக்கத்தில் தன்னுடைய முதல் ஆய்விலேயே அமைச்சர் பயணிகளிடம் பேசிய விதம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க