செய்திகள் :

நெல்லை: சிங்கப்பெண் படை விழிப்புணர்வு நிகழ்ச்சி; புகார் அளித்த மாணவிகள்- 3 பேர் மீது பாய்ந்த போக்சோ

post image

நெல்லை அருகேயுள்ள பாலாமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் 3 மாணவிகள் தங்களுக்கு நேந்த பாதிப்புகளைக் கூறினர். அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது அறிமுகமான நபர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதைக் கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதுகுறித்து ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல 16 வயது மாணவி ஒருவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர், பின்னர் பல்வேறு எண்களில் இருந்து தொந்தரவு செய்து வந்தாகக் கூறினார். இதுகுறித்து குழந்தைகள் ஹெல்ப்லைனுக்கு தகவல் கூறப்பட்டதுடன், ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் 15 வயது மாணவி ஒருவர், தனது புகைப்படத்தை வேறொருவருடன் இருப்பது போல ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் தவறாக சித்திரித்ததாக புகார் கூறினார். இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் கூறப்பட்டு தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிங்கப்பெண் படையினர்

”இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் 3 மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை துணிச்சலாக காவல்துறையினரிடம் கூற வேண்டும். உடனடி நடவடிக்கை மோற்கொள்ளப்படும்” என, சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.   

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க