செய்திகள் :

நெல்லை: படிக்கட்டில் இறந்து கிடந்த சிசு; கர்ப்பத்தை மறைத்து இளம்பெண்ணுக்கு திருமணம் - நடந்தது என்ன?

post image

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகிலுள்ள அரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தாழையூத்து அருகிலுள்ள ஏரான்குடியைச் சேர்ந்த பிச்சம்மாள் என்பவருக்கும் கடந்த 13-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமான அன்றிரவே அரியகுளத்திலுள்ள மணமகன் வெங்கடேஷின் வீட்டிற்கு வந்தனர்.

தாலுகா காவல் நிலையம்

மறுநாள் 14-ம் தேதி காலை பிச்சம்மாளுக்கு திடீரென கடுமையான வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் ஏற்பட்டது. வீட்டின் கழிவறையில் அதிகளவில் ரத்தம் இருந்ததைக் கண்டு வெங்கடேஷின் சகோதரி பிச்சம்மாளிடம் விசாரித்தபோது தனக்கு வயிற்றுவலி இருப்பதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து பிச்சம்மாளை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில் வெங்கடேஷின் வீட்டுப் படிக்கட்டில் இறந்த நிலையில் சிசுவின் உடல் கிடந்துள்ளது. இதைப்பார்த்த வெங்கடேஷின் உறவினர்கள், திருமணத்திற்கு முன்பே பிச்சம்மாள் கருவுற்று 5 மாதங்கள் இருந்திருக்ககூடும். இந்த உண்மையை மறைத்து பிச்சம்மாளை திருமணம் செய்து வைத்துவிட்டதாக பிச்சம்மாள் வீட்டார் மீது குற்றம் சாட்டினர்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதை மறைத்தும், ஏமாற்றியும் திருமணம் செய்து வைத்ததால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வெங்கடேஷ், நெல்லை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

இதுகுறித்து போலீஸார், “இந்த சம்பவத்தில் இறந்த நிலையில் சிசுவின் உடல் மீட்கப்பட்டது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருமணமான இளம்பெண் மற்றும் அவரின் பெற்றோரிடம் விசாரணை நடந்து வருகிறது. முழு விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.     

குமரி: சிறுமியை கடத்தி யாசகம் எடுக்க வைக்க முயன்ற தாய்மாமன் - அதிரடியாக கைது செய்த போலீஸார்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் குடும்பம் குடும்பமாக சுற்றி திரியும் யாசகர் சிலர் இரவு நேரம் குளச்சல் காவல் நிலையம் எதிரே செயல்பட்டு வரும் ஆவின் பாலகம் அருகே படுத்து தூங்குவது வ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பெண் உட்பட இருவர் வெட்டிக்கொலை - பட்டப்பகலில் நடந்தேறிய கொடூரம்!

திருப்பத்தூர் மாவட்டம், தோரணம்பதி அடுத்த வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தனியார் காலிமனை பகுதிக்கு பெண் ஒருவருடன் ஆண் ஒருவர் காரில் இன்று பிற்பகல் வேளையில் வந்தார். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர்கள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.700 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல் - பின்னணியில் பிரபல போதை மாஃபியா டீம்!

சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை முழுவ... மேலும் பார்க்க

`விவாகரத்து செய்துவிடுவார் என்று பயந்தேன்' - கணவரின் தோழியை ரூ.13 லட்சம் கொடுத்து கொன்ற மனைவி

புனே விமான நிலையத்தில் பணியாற்றி வந்தவர் வர்ஷா(23). இவர் தனது இரண்டரை வயது மகளுடன் மத்திய பிரதேசத்தில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு தீபாவளியை கொண்டாட சென்றார். அங்கு அவர் தனது ஆண் நண்பரான தொழிலதிபர் நில... மேலும் பார்க்க

வட இந்தியா முழுவதும் வாட்ஸ்ஆப் மூலம் ரூ.88 கோடிக்கு கிரிக்கெட் சூதாட்டம்: ரெய்டில் சிக்கிய 37 பேர்

நாடு முழுவதும் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக பீகார் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இது போன்ற சூதாட்டம் வாட்ஸ் ஆப் மூலம் நடப்ப... மேலும் பார்க்க

மும்பை தாதா சோட்டா ராஜனை கொலை செய்ய அனுப்பப்பட்ட தாவூத் இப்ராகிம் கூட்டாளி - உ.பி.யில் சுட்டுக்கொலை

டெல்லியில் சட்ட அமைச்சர் கபில் சர்மா அலுவலகம் அருகில் கடந்த 16ம் தேதி நடந்த கொலை தொடர்பாக தாவூத் இப்ராகிம் கூட்டாளி நசீம் துரானி என்பவனை போலீஸார் தேடி வந்தனர். கடந்த 16ம் தேதி வடகிழக்கு டெல்லியின் கஜூ... மேலும் பார்க்க