செய்திகள் :

`நெல் கொள்முதல் செய்யாததால் ஒரு நாள் மழையில், பல மாத உழைப்பு வீணாகிறது' - நீதிபதிகள் வேதனை

post image

தஞ்சையைச் சேர்ந்த அமிர்தராஜ் ஹமீதுதீன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், `தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அறிவியல் அடிப்படையில் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்குவதற்காக நிரந்தர சேமிப்பு கிடங்குகளை கட்ட உத்தரவிட வேண்டும்.

மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை மழை, வெள்ளம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் சேமிப்பு, பராமரிப்பு, கையாளுதல், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிலையான  வழிகாட்டுதல்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும், இது போன்ற சேதங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

கொள்முதல் நிலையங்களில் கொட்டபட்டுள்ள நெல் மூட்டைகள்
நெல் மூட்டைகள்

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் இடம் மட்டுமல்ல, பல மாவட்டங்களில் இந்த பிரச்னை உள்ளது. ஒரு நாள் மழையில், பல மாத உழைப்பு வீணாகிறது. பெரும் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவர்  பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

டெலிகிராம்: `கட்டுப்பாடற்ற அரக்கனைப் போல.!' - மத்திய அரசின் கடும் வாதம்; தடையை உறுதி செய்த கோர்ட்

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறைகேடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வில் மீண்டும் வினாத்தாள் கசிவு போன்ற... மேலும் பார்க்க

ரூ.100க்காக போராடிய வழக்கறிஞர்; `ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு பிடிவாரன்ட்' நுகர்வோர் ஆணையம் அதிரடி

நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகர் என்பவர் கடந்த 2022 பிப்ரவரி 13-ம் தேதி, தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சொந்த காரில் சென்றுள்ளார். ராமேஸ்வரம் நுழைவாயி... மேலும் பார்க்க

"GDP-யில் 17% உழைப்பு இல்லத்தரசிகளுடையது; அவர்களின் உத்தேச வருமானம் ரூ.30,000" - உச்ச நீதிமன்றம்

இல்லத்தரசிகள் அல்லது குடும்பத் தலைவிகள் என்பவர்கள் வெறும் வீட்டைப் பராமரிப்பவர்கள் மட்டுமல்ல, அவர்கள் நாட்டின் உண்மையான கட்டுமானக் கற்கள் (Building Blocks) என்றும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழ... மேலும் பார்க்க

`தமிழக முதல்வர் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி தருவோம் என்கிறார்; ஆனால்..!' - நீதிபதி விமர்சனம்!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்,உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,`சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறேன்.எங்கள் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவ... மேலும் பார்க்க

`காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்' - தமிழக அரசு

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்... மேலும் பார்க்க

ரூ.634 கோடி லஞ்ச விவகாரம்: `கே.என் நேரு மீது ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு' - ஹைகோர்ட்டில் தமிழக அரசு

முந்தைய திமுக ஆட்சி காலத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவி... மேலும் பார்க்க