செய்திகள் :

`நேபாளமும் இந்தியாவில் ஆக்கிரமித்துள்ளது; இப்போ தான் தெரியவந்தது' - அதிர்ச்சி கிளப்பிய நேபாள பிரதமர்

post image

இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் எல்லைப் பிரச்சனை தற்போது ஒரு புதிய அதிரடி திருப்பத்தை சந்தித்துள்ளது.

"இந்தியா மட்டும்தான் நேபாளத்தின் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் நேபாளமும் இந்தியாவின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என்ற உண்மை எனக்கு இப்போதுதான் தெரியவந்தது" என்று நேபாள நாட்டின் பிரதமர் பாலேந்திர ஷா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சை பிரிவாக இருக்கும் காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியதுரா ஆகிய எல்லைப் பகுதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஷா, இப்பிரச்சனை குறித்து இந்தியாவுக்குத் தூதரகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 நேபாள பிரதமர்
நேபாள பிரதமர்

மேலும், இந்தப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண இரு நாடுகளும் ஒன்றிணைந்து வரலாற்று அறிஞர்கள் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சம்மதித்துள்ளதாகவும், இதுகுறித்து சீனா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடனும் நேபாள அரசு ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், "நேபாளமும் இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது" என்று பிரதமர் ஷா பேசியது நேபாள நாட்டு மக்கள் மற்றும் அரசியல் வல்லுநர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் எல்லையை நேபாளம் ஆக்கிரமித்ததாக எந்த ஒரு வரலாற்று ஆதாரமும் இல்லை என்று நேபாளத்தின் முன்னாள் தூதர்கள் மற்றும் எல்லை நிபுணர்கள் பிரதமரின் இந்த விசித்திரமான கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

எல்லையில் சில இடங்களில் எல்லைத் தூண்கள் காணாமல் போயுள்ளதால், இரு நாட்டு விவசாயிகளும் ஒருவருக்கொருவர் நிலங்களை மாற்றிப் பயன்படுத்தி வருகிறார்களே தவிர, நேபாள அரசு இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்று எல்லை நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை வழித்தடம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே சலசலப்பு நிலவி வரும் சூழலில், இந்தியாவின் எல்லையை நேபாளமும் ஆக்கிரமித்துள்ளது என்று அந்நாட்டு பிரதமரே நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க