செய்திகள் :

``இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள்; வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்' - அதிமுக ராஜ் சத்யன்

post image

அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தவெகவில் இணைந்த நிலையில் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏக்கள் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராகக் நடந்த செயல்களால் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் தன்னை மாய்த்துக்கொண்டதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT Wing) செயலாளர் ராஜ் சத்யன் தெரிவித்திருக்கிறார்.

மகேந்திரன்
மகேந்திரன்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், " அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராகக் நடந்த செயல்களால் கடந்த சில தினங்களாகவே மிகுந்த மனவேதனை அடைந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், முகநூல் பக்கங்களில் கடுமையாக கழக பணி ஆற்றக்கூடிய திரு.கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்கள், "கழகம் மீண்டும் வலிமையோடு எழுந்து வர வேண்டும்" என்ற கனவோடு தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

தேர்தல் தோல்விகளில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் கழகத்திற்கு எதிரான சிலரின் நடவடிக்கைகளால் இன்று ஒரு தூய தொண்டரை நாம் இழந்திருக்கிறோம்.

இது அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழகம் முழுவதும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கழகமே கோயில், அம்மாவே தெய்வம் என்று வாழ்ந்து வரும் லட்சோப லட்சம் தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் உயிர்நாடி.

ஜெயலலிதா
ஜெயலலிதா

இத்தகைய தொண்டர்களின் மனநிலையை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருந்தால், மகேந்திரன் போன்ற ஒரு துடிப்புள்ள தொண்டரை நாம் இழந்திருக்க மாட்டோம். தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள்.

வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள். மறைந்த தம்பி கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்களுக்கு எங்களது கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

`நேபாளமும் இந்தியாவில் ஆக்கிரமித்துள்ளது; இப்போ தான் தெரியவந்தது' - அதிர்ச்சி கிளப்பிய நேபாள பிரதமர்

இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் எல்லைப் பிரச்சனை தற்போது ஒரு புதிய அதிரடி திருப்பத்தை சந்தித்துள்ளது. "இந்தியா மட்டும்தான் நேபாளத்தின் பகுதிகளை ஆக்கிரமித்... மேலும் பார்க்க

வாக்களித்த மக்களுக்கு 'நன்றி' சொல்ல திருச்சிக்கு செல்கிறார் முதல்வர் விஜய் | Live updates

திருச்சி செல்கிறார் விஜய்தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் நின்று களம் கண்டார். இந்த இரண்டு தொகுதிகளிலுமே மக்கள் விஜ... மேலும் பார்க்க

"நான் நினைத்திருந்தால் துணை முதல்வர் பதவியை விஜய் கொடுத்திருப்பார்; ஆனால்..." - பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (மே.31) நடைபெற்றது.இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "பேரத்திற்கும் பதவிக்கும் சோஃபாவு... மேலும் பார்க்க

கண்டுகொள்ளாத துரைமுருகன்; கவனம்பெற்ற தவெக சுதாகர் - காட்பாடி எம்எல்ஏ அலுவலகத்துக்கு விடிவுக் காலம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், காட்பாடி தொகுதியில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு படுதோல்வியடைந்தார். த.வெ.க சார்பாக போட்டியிட்ட டாக்டர் எம்.சுதாகர் வெற்றிபெற்... மேலும் பார்க்க

Vijay: "மதவாத இயக்கம் வந்துவிடாமல், மற்றொரு திராவிட இயக்கமாக தவெக வந்துள்ளது" - துரை வைகோ

"தவெக அரசு அமைந்திருப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளதாகப் பேசும் கட்சியினர், கடந்த காலங்களில் நடந்தது குதிரை பேரமா, கழுதை பேரமா என்பதை கூற வேண்டும்” என்று திருச்சி மக்களவை உறுப்பினரும், மதிமுக முதன்மைச்... மேலும் பார்க்க