செய்திகள் :

"பசும்பால் புத்திசாலியாக்கும்; எருமைப் பால் சோம்பேறியாக்கும்" - ராஜஸ்தான் பாஜக அமைச்சர் பேச்சு

post image

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நடந்த பசு பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக-வைச் சேர்ந்த அம்மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், ''பசும்பால் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கிறது. அதேசமயம் எருமைப் பால் குழந்தைகளை மந்தமாக மாற்றுகிறது.

நாட்டுப் பசுவின் பால் குடிப்பவர் புத்திசாலிகளாக மாறுகிறார். அதேசமயம் எருமைப் பால் குடிப்பவர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள். இதை நிரூபிக்க சில நாட்களுக்கு முன்பு கன்றுகளை ஈன்ற சில பசுக்கள் மற்றும் எருமைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை எதிர்ப்பக்கங்களில் நிற்க வைக்குமாறு பரிந்துரைத்தேன்.

அதன் பிறகு சிறிது தூரத்தில் இருந்து கன்றுகளை அவிழ்த்துவிடச் சொன்னேன். இதில் எருமைப் கன்றுக்குட்டிகள் ஓடிச்சென்று தனது தாயைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டன. ஆனால் பசுவின் கன்றுக்குட்டிகள் நேரடியாக தனது தாயிடம் சென்றன.

அதாவது பசுவின் பால் குடிக்கும் குழந்தை புத்திசாலி. அதே நேரத்தில் எருமையின் பால் குடிக்கும் குழந்தைகளின் மனம் பலவீனமாக இருக்கும். இதே போன்று மற்றொரு உதாரணத்தையும் குறிப்பிட்டார்.

பசு மற்றும் எருமை கன்றுகளை அவற்றின் தாயிடம் விடுவதற்கு முன்பு முழுமையாக பால் கொடுங்கள். எருமைக் கன்று, சிறிது தூரம் நடந்ததும் இருமி, தூங்கத் தொடங்கும். அதே நேரத்தில் பசுவின் கன்று, அதன் வாலை உயர்த்திப் பிடித்து, துடிப்பான இயக்கத்தில் குதித்து, அதன் விளையாட்டுத்தனமான ஆற்றலையும் கூர்மையான புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தும்" என்று கூறினார்.

மாடு மேய்க்க ரூ.10 ஆயிரம் சம்பளம்

அவர் மேலும் கூறுகையில், "உங்கள் குழந்தைகள் முன்னேற விரும்பினால், அவர்களை முன்னேறச் செய்து, அவர்களைப் புத்திசாலிகளாகவும், விளையாட்டுத்தனமாகவும் மாற்ற விரும்பினால், அவர்களுக்கு 'கோமாதா'வின் பால் வழங்குங்கள்" என்று முடித்தார்.

14 கிராமங்களில் ஒரு பாரம்பர்ய பசு மேய்ச்சல் முறையை மீண்டும் தொடங்குவதாகவும் மதன் அறிவித்தார். இதன் கீழ் ஒவ்வொரு 70 பசுக்களுக்கு கிராம மாடு மேய்ப்பவர் (குவாலா) ஒருவர் நியமிக்கப்படுவார். எண்ணிக்கை 70 ஐத் தாண்டினால், இரண்டு மாடு மேய்ப்பவர்கள் ஈடுபடுவார்கள். ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு ரூ.10,000 கௌரவ ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் அழுத்தம்; போதைப்பொருள் கடத்தல் மன்னன் மெக்சிக்கோவில் சுட்டுக்கொலை - வெடித்த கலவரம்

மெக்சிக்கோ போதைப் பொருள் கடத்தலுக்கு மிகவும் பெயர் பெற்றது. அங்கு போதைப்பொருள் கடத்தலில் நெமேசியோ ஒசேகுரா ரூபன் செர்வாண்டஸ் என்று அழைக்கப்படும் எல் மென்ச்சோ என்பவன் தான் போதை பொருள் கடத்தலில் கொடிகட்ட... மேலும் பார்க்க

அஜித் பவார் : `காரணத்தை அறிய அனைவரும் விரும்புகிறார்கள்' - விமான விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த மாதம் 28ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து சந்தேகம் கிளப்பிய சரத் பவார் பேரன் ரோஹித் பவார், விமான வ... மேலும் பார்க்க

கைவிட்ட தாய்... அரவணைத்த பொம்மை; இதயங்களை வென்ற குட்டிக் குரங்கு உணர்த்தும் வாழ்க்கை பாடம்!

ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 'பஞ்ச்' என்ற ஜப்பானிய மக்காக் குரங்கு குட்டி பிறந்தது. பொதுவாக குரங்கு குட்டிகள் பிறந்தவுடன் தனது தாய... மேலும் பார்க்க

AI மாநாடு: `காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் சதி' - ராகுல் காந்திக்கு எதிராக கருப்புகொடி காட்டிய பாஜக

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது மும்பை அருகில் உள்ள பீவாண்டியில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று பீவாண்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ர... மேலும் பார்க்க

சூப்பர் சென்னை: தொலைநோக்கு பார்வையாளர்களை ஒன்றிணைத்த அறிமுக சூப்பர் சென்னை மாநாடு

சென்னையின் எதிர்காலத்தை வடிவமைப்பது குறித்த ஒரு நாள் முழுவதும் நடைபெறும் உரையாடலுக்காக தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க கொள்கை வகுப்பாளர்கள், தொழில் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் நகர்ப்புற த... மேலும் பார்க்க

"பேஸ்புக் காதலனோடு வாழ விரும்புகிறேன்" - சேர்த்து வைத்த கணவன்; உத்தரப்பிரதேசத்தில் நடந்த சுவாரஸ்யம்!

உத்தரப்பிரதேச மாநிலம் சஹரான்பூர் பகுதியைச் சேர்ந்த பீரு என்பவர் முஜாபர் நகரைச் சேர்ந்த சோனி (23) என்ற பெண்ணைக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கி... மேலும் பார்க்க