செய்திகள் :

பட்ஜெட் 2026: குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடர்! | Live

post image

ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த சசி தரூர்!

சசி தரூர்
சசி தரூர்

பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற உயர்மட்டக் குழுக் கூட்டம், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்றது. இதில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் சசி தரூர் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து அவர் விளக்கமளித்தபோது, ``கூட்டம் குறித்து ஒரு நாள் முன்னதாகவே தகவல் கிடைத்ததால் பங்கேற்க முடியவில்லை" எனத் தெரிவித்திருந்தார். எனினும், சசிதரூர் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

காலை 11 மணிக்கு உரை!

மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும். அதன் அடிப்படையில் காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

அடுத்த நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து, இந்த கூட்டத் தொடரின் முதல் அமர்வு, அடுத்த மாதம் 13-ம் தேதிவரையும், இரண்டாவது அமர்வு மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதிவரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

"ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்கிறார்; காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்!" - எஸ்.ஏ. சந்திரசேகர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெகவுடன... மேலும் பார்க்க

`முக்கோண' ரேஸ்; அதில் இருவர் அமைச்சர்கள்.! - பரபரக்கும் தாராபுரம் திமுக; சீட் யாருக்கு?

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் தாராபுரம், அவிநாசி ஆகிய இரண்டு தொகுதிகள் தனித் தொகுதிகளாகும். இதில், அதிமுக-வின் கோட்டையாக அவிநாசி தொகுதி கருதப்படும் நிலையில், தாராபுரம் தொகுதி திமுகவின் கோ... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் 2026: விவசாயம், தங்கம் டு வருமான வரி! - உங்கள் எதிர்பார்ப்பு என்ன?| #கருத்துக்களம்

வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) 2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட். அன்று இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுவார்... அறிவிப்பார். இந்தியாவில் வலு... மேலும் பார்க்க

``அம்பேத்கர் பெயரை எப்படி தவிர்க்க முடியும்?" - கொந்தளித்த அதிகாரி மன்னிப்பு கேட்ட பாஜக அமைச்சர்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடியரசு தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் மகாரஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான கிரீஷ் மகாஜன் உரையாற்றினார். அந்த உரையில், குடியரசுத் தினத்... மேலும் பார்க்க

அனுதாப அலைகளை கோட்டைவிட்ட அதிமுகவும், கோட்டைக்கு விரைந்த ஸ்டாலினும்! | ‘வாவ்’ வியூகம் 03

(கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான்‘வாவ்’ வியூகம்.)... மேலும் பார்க்க

தமிழக ஊர்ப்பெயர்களில் 'ஹள்ளி' இணைக்கப்பட்ட விவகாரம்; ஜி.கே.மணியின் கோரிக்கைக்கு அரசின் பதில் என்ன?

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல ஊர்களின் பெயர்களில் ஹள்ளி என்று இருப்பதை மாற்ற வேண்டும் என்று பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி வைத்த கோரிக்கையை அடுத்து தமிழக அரசு அதுகுறித்து பரிசீலித்து ந... மேலும் பார்க்க