செய்திகள் :

பத்ம ஸ்ரீ: "கிட்னா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்" - மறைந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணனின் மனைவி

post image

2026க்கான பத்ம ஶ்ரீ விருது நீலகிரி மாவட்டம் ஆலு குரும்பர் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த குரும்பா ஓவியக் கலைஞரான ஆர்.கிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது.

3000 ஆண்டுகள் பழமையான முறைப்படி இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்து ஆவணப்படுத்தியுள்ளார்.

கிருஷ்ணன் தன் 6 வயதில் இருந்தே குரும்பா ஓவியம் மீது அதிகம் ஆர்வம் இருந்தது.

மறைந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணன்
மறைந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணன்

குரும்பா ஓவியங்கள் இயற்கை முறைப்படி இயற்கைப் பெருட்களைப் பயன்படுத்தி வண்ணங்கள் எடுத்து ஓவியங்கள் வரைவது.

6ஆம் வகுப்பு வரை படித்த இவர், குரும்பா ஓவியம் மீது இருந்த அதிக ஆர்வத்தினால் தங்கள் கலாசாரத்தையும், பாரம்பர்ய வேட்டை நுட்பம், திருமணங்கள், மூதாதையர் வழிபாடு, இசைக்கருவிகள் போன்றவற்றை சுவர்களில் வரைந்து திறமைகளை வளர்த்துள்ளார்.

அழிந்து வரும் கலைகளில் குரும்பா ஓவியமும் ஒன்று. இந்தக் கலையை மீட்டெடுத்ததில் கிருஷ்ணனுக்குப் பெரும் பங்கு உள்ளது.

குரும்பா ஓவியம்
குரும்பா ஓவியம்

கிருஷ்ணன், குரும்பா ஓவியத்தைப் பலருக்குப் பழமை மாறாத முறையில் கற்பித்து வந்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி தனது 53 வயதில் மறைந்தார்.

குரும்பர் கலை வடிவத்தைப் பாதுகாக்க, அதற்கு புவிசார் குறியீடு பெற அவருடைய கடைசி காலம் வரை கிருஷ்ணன் பெரும் முயற்சி எடுத்து வந்துள்ளார்.

கிருஷ்ணனின் மனைவி சுசீலாவிடம் நாங்கள் பேசினோம்.

"நாங்க அவர "கிட்னா"னுதா கூப்பிடுவோம். அவருக்கு சின்ன வயசுல இருந்தே குரும்பா ஓவியம் பண்ண ரொம்ப பிடிக்கும் 30 வருசமா குரும்பா ஓவியம் மட்டும்தான் பண்ணிட்டு இருந்தாரு. அவரு இறக்குறதுக்கு ஒரு நாள் முன்னாடி கூட ஸ்கூல் போய் பிள்ளைகளுக்கு குரும்பா ஓவியத்தைப் பற்றி சொல்லிக் கொடுத்தாரு.

கிருஷ்ணனின் மனைவி சுசீலா, குழந்தைகள்
கிருஷ்ணனின் மனைவி சுசீலா, குழந்தைகள்

எங்களுக்கு மொத்த 4 பிள்ளைங்க மூணு பொண்ணுங்க ஒரு பையன். எங்க சொந்த ஊரு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருக்க பழங்குடியின கிராமம் வெள்ளரிக் கொம்பை.

நாங்க இப்போ மேட்டுப்பாளையத்து மாறிட்டோம். இங்கதான் நான் கூலி வேலை செஞ்சி என் பிள்ளைங்களைப் பாத்துக்குறேன்.

கல், புற்கள், விலங்குகளின் சாணம் மற்றும் மண்ணிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்தி குரும்பா ஓவியம் பண்ணுவாங்க.

இது வரையிறதுக்கு குச்சி, இலை, வெள்ளை துணியதா பயன்படுத்துவாங்க. கிட்னா அப்பல இருந்து இத மட்டுதான் பயன்படுத்தினார்.

பத்ம ஶ்ரீ விருது கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா. ஆனா கிட்னா இருந்து இருந்தா ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாரு.

கிட்னா குரும்பா ஓவியத்துகாக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காரு .

ஓவியர் கிருஷ்ணன்
ஓவியர் கிருஷ்ணன்

அவரு இருந்த வரைக்கும் நெறைய ஸ்கூலுக்குப் போய் குழந்தைங்களுக்கு குரும்பா ஓவியம் சொல்லுத்தருவாறு. நெறைய பிரைவேட் ஸ்கூல இருந்து அவங்களே கிட்னாவ கூப்பிடுவாங்க. பத்ம ஶ்ரீ அவரு இருந்தபோது கொடுத்து இருந்தா நாங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்போம். அவரும் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாரு" என்றார்.

453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு; ஆங்கிலேயர் கால பீரங்கி குண்டுகள்! - தொல்லியல் மாணவர்கள் கண்டெடுப்பு

நெல்லை மாவட்டம், சுற்று வட்டாரப் பகுதிகளில் மன்னர் காலத்து பல்வேறு கல்வெட்டுகள், ஆய்வில் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறையின் இரண்டாம் ஆண... மேலும் பார்க்க

யாக்கைக்களரி: `போர் அழிக்க முயன்ற உடல்களை மீண்டும் மனிதர்களாக்கும் தருணம்'- இது போர்நிலத்தின் சாட்சி

உலகில் போர்ச்சூழல் எங்கு நிலவினாலும் போர் பற்றிய நினைவும், பாதிப்பும் பூமியில் வாழ்கிற ஒவ்வொரு உயிர்களுக்கும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அந்தப்போர்ச்சூழலின் நினைவுச்சுமையை நம் உணர்வுகளில் கடத்தி கணக... மேலும் பார்க்க

சென்னை: `வீதிவிருது' விழாவில் இரண்டாம் பரிசு பெற்ற பெருஞ்சலங்கை ஆட்டக்காரர்கள்!

சென்னையில் மாற்று ஊடக மையத்தினால் நம் மண்ணின் கலைஞர்களுக்கு விருது வழங்கும் 'வீதி விருது விழா' வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. 13-ஆம் ஆண்டு வீதி விருது விழா கடந்த 3 ஆம் தேதி சென்னை முகப்பேர் கிழக்கில... மேலும் பார்க்க

'குழந்தைகள் நம் பெருமைக்கான பொருள்கள் அல்ல...' - கதைச்சொல்லி குமார் ஷா

' நாடோடி, இலக்கில்லா திசைகளை நோக்கியே பயணப்பட்டுக்கொண்டிருப்பான்... அந்தப் பயணங்களின் வழி பல இலக்குகளை எட்டியிருப்பான்' அவ்வாறு நாடக கலைஞர், ட்ராவலர், கதைச்சொல்லி என, தன் பயணத்தின் வழி பல்வேறு பரிமாணங... மேலும் பார்க்க