செய்திகள் :

பராசக்தி: "இந்த படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது"- கமல்

post image

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பராசக்தி'.

ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தி திணிப்புக்கு எதிரான தமிழர்களின் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'பராசக்தி' படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கமல்

பராசக்தி
பராசக்தி

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " அன்புள்ள இளவல், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு... தமிழ்த் தீ பரவட்டும்! பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்.

பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது முதல் பாராட்டு இந்த பயோபிக் ஷன் கதையையும், இதன் இயக்குனர் சுதா கொங்கராவையும் இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இந்தச் சினிமா சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

பொங்கல் ரிலீஸ்: கார்த்தி படத்துக்கு க்ரீன் சிக்னல், குஷியாகும் ஜீவா, தள்ளிப் போகிறதா சந்தானம் படம்?

தியேட்டர்களில் பொங்கல் திருவிழா களைகட்ட ரெடியாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' இப்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 9ம் தேதி வெளியாக வேண்டிய விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' தேதி ... மேலும் பார்க்க

தள்ளிப்போன 'ஜனநாயகன்'; ரேஸில் இணைந்த கார்த்தி, ஜீவா படங்கள்! - இந்தாண்டு பொங்கல் ரிலீஸ் இவைதான்!

பொங்கல் வெளியீடாக விஜய்யின் ‘ஜனநாயகன்’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ என இரண்டு திரைப்படங்கள் மட்டுமே திரைக்கு அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், அ.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத... மேலும் பார்க்க

Music for Meals: சமூக சேவைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி; இளையராஜாவிற்குக் குவியும் பாராட்டுகள்!

இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாகவும், சமூக சேவைக்காக நிதி திரட்டும் நோக்கத்துடனும் 'Music for Meals' என்ற தலைப்பில் நேற்று (ஜன.11) பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.பெங்... மேலும் பார்க்க

"புதிய கதைகளைச் சொன்னேன்; ஆனால், விஜய் சாருக்கு ‘பகவந்த் கேசரி’தான்..." - இயக்குநர் அனில் ரவிபுடி

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.கூடிய விரைவில் பிரச்னைகள் முடிக்கப்பட்டு திரைப்படம் வெளியாக... மேலும் பார்க்க

"என் படத்திற்கு சென்சார் போர்ட் 48 கட்டுகள் கொடுத்தது; நிறைய கஷ்டப்பட்டோம்" - நடிகர் ஜீவா

'பேமிலி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இ... மேலும் பார்க்க