TNPSC குரூப் 2, 2A தேர்வு ஒத்திவைப்பு; "ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்!"- ...
" 'பரியேறும் பெருமாள்' பார்த்துட்டு நானும் H.வினோத்தும் வெட்கப்பட்டோம், ஏன்னா.!"- ராஜு முருகன்
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'மை லார்ட்' .
இத்திரைப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( பிப்.7) சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

மேடையில் மாரி செல்வராஜ் குறித்து பேசிய ராஜு முருகன், " 'பரியேறும் பெருமாள்' படம் வெளியானப்போது நானும் H.வினோத்தும் சேர்ந்துதான் பார்த்தோம். 'எப்படி படம் எடுத்திருக்காங்க'ன்னு பாருங்க சார். எனக்கு வெட்கமா இருக்குன்னு' சொன்னாரு.
எனக்கு அதைவிட பல மடங்கு வெட்கமா இருந்துச்சு. அந்த மாதிரியானப் படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு அதிர்வை உருவாக்கினாரு.
இன்றைக்கு வரைக்கும் அந்த அதிர்வு குறையவே இல்ல. அடுத்தடுத்து உச்சத்திற்கு செல்லக்கூடிய மாரி எனக்கும் ஒரு வழிகாட்டி தான்.

எளிய மனிதர்களின் கதையை பேசும் படத்தை வெற்றியாக்குவது ரொம்ப கஷ்டம் ஆனால் மாரியின் வெற்றி ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை கொடுக்குது.
மாரி மேடையில் 'மை லார்ட்' பற்றி பேசிய விஷயங்கள் எனக்கே ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை தருது" என பேசியிருக்கிறார்.




















