Startup சாகசம் 61 : ‘இறக்குமதிதான் தரம்’ என்ற மாயையை உடைத்த உள்ளூர் ஸ்டார்ட்அப் ...
பரோலில் வெளியே வந்து தப்பித்த கொலைக் குற்றவாளி; 12 ஆண்டுகள் பாலிவுட் நடிகராக வலம்; சிக்கியது எப்படி?
குஜராத் மாநிலத்தில் நடந்த கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றவர் ஹேமந்த் நகின் தாஸ். 2005 ஆண்டு நடந்த கொலை ஒன்றில் ஹேமந்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.
அவர் மகாசனா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். அவர் 2014ம் ஆண்டு 30 நாட்கள் பரோலில் வெளியில் வந்தார். 30 நாட்கள் முடிந்த பிறகு கோர்ட்டில் சென்று சரணடையவேண்டும். ஆனால் ஹேமந்த் கோர்ட்டில் சரணடையவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார். அவரைக் கடந்த 12 ஆண்டுகளாக போலீஸார் தேடி வந்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
தற்போது அகமதாபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஹேமந்த் மோடி என்ற பெயரில் மும்பையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. அவர் மும்பையில் பாலிவுட்டில் படங்களில் நடித்து வந்துள்ளார்.

அமிதாப் பச்சன் மற்றும் அமீர் கானுடன் இணைந்து 'தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்', மற்றும் ரன்வீர் சிங்கின் 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்', 'வாக்லே கி துனியா' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பாலிவுட் படங்களில் அவர் நடித்ததாக அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
லாகூர் 1947 மற்றும் மலையாளத் திரைப்படமான எல்2: எம்புரான் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்ட நாள்களாக குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்துள்ளனர்.
குஜராத்தி டிவி தொடர்களில் கூட நடித்து இருக்கிறார். ஆனாலும் அவரை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் பரோலில் வெளியில் வந்ததும், மும்பைக்குச் செல்வதற்கு முன்பு பதான் என்ற இடத்தில் வசித்து வந்தார். அங்கும் அவர் அடிக்கடி தனது தங்கும் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார்.
பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக, அவர் தனது தோற்றத்தையும் அடையாளத்தையும் திரும்பத் திரும்ப மாற்றிக்கொண்டார் என்றனர்.
மோடி சமீபத்தில் அகமதாபாத்திற்குத் திரும்பியதாக உளவுத்துறைக்குக் கிடைத்த தகவலையடுத்து அவரை போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

















