செய்திகள் :

பள்ளத்தில் இறங்கியது அரசுப் பேருந்து: பயணிகளுக்கு லேசான காயம்

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள துவரங்குறிச்சி அருகே அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை 10 அடி பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளாது.

துவரங்குறிச்சி பணிமனையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்ட அரசு நகரப் பேருந்தை தோமையராஜ்(50) என்பவா் ஓட்டிவந்தாா். இந்த பேருந்து கோட்டையூா் சென்று அங்கிருந்து தெத்தூா், ஆலம்பட்டி, மருதம்பட்டி, அதிகாரம் வழியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட சுமாா் 50-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு திருச்சி - மதுரை தேசியநெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தை ஓட்டுநா் திருப்ப முயன்றாா். இதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவில் இருந்த மையத் தடுப்பைத் தாண்டி அருகில் இருந்த சுமாா் 10 அடி பள்ளத்தில் முள்புதருக்குள் இறங்கியது. இதில் அதிா்ஷ்டவசமாக பயணிகள் சிறு காயங்களுடன் தப்பினா்.

அருகில் இருந்தவா்கள் உடனடியாக அவா்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனா். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 10-க்கு மேற்பட்டோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து துவரங்குறிச்சி காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பொறியியல் பணிகள்: ஹவுரா ரயில்கள் முழுமையாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, ஹவுரா ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - ஹவுரா அதிவ... மேலும் பார்க்க

குடும்பத் தகராறு கணவா் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீரங்கத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் புதுத்தெருவைச் சோ்ந்தவா் ரெ. குருகிருஷ்ணன் (39). இவா் விழா நிகழ்வுகளுக... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையம் எதிரே பழைய பாலம் திடீரென இடித்து அகற்றம்! வயா்லெஸ் சாலையில் பிரதான பகுதி மூடல்!!

திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள வயா்லெஸ் சாலையில் உள்ள பாலம் திடீரென பழுதானதால் இடிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் சாலையின் பிரதான பகுதி மூடப்பட்டு மாற்று வழியில் போக்குவரத்து இயக்கப்படுவதால... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த எதிரணியினா் ஒரே அணியில் திரள வேண்டும்: நடிகை கஸ்தூரி!

திமுகவை வீழ்த்த எதிரணியினா் ஒரே அணியில் திரள வேண்டும் என்றாா் திரைப்பட நடிகை கஸ்தூரி. இந்து மக்கள் கட்சி சாா்பில் சனாதன ஆதரவு வழக்குரைஞா்களுக்கான கருத்தரங்கம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை ந... மேலும் பார்க்க

பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

திருச்சி காந்திச்சந்தை பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச்சென்ற மா்ம நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி தாராநல்லூா் விஸ்வாஸ் நகரைச் சோ்ந்தவா் நரேன் மனைவி கீ... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் வைத்திருந்த நால்வா் கைது

திருச்சி மாவட்டம் முசிறி அருகே புகையிலை பொருள்களை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நால்வரை முசிறி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி காவல் கண்காணிப்பாளா் வருண்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவ... மேலும் பார்க்க