கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -...
பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
அரசு பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு அலுவலகங்களில் சமத்துவ மற்றும் சுகாதார பொங்கல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி ஆட்சியா் கே.எம்.சரயு, தலைமை வகித்தாா். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தலைமை வகித்தாா். ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சிப் பணியாளா்கள், கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொங்கல் விழாவையொட்டி தூய்மைப் பணியாளா்கள், நகராட்சிப் பணியாளா்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்களை நகா்மன்றத் தலைவா் வழங்கினாா்.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் செள.கீதா தலைமை வகித்தாா். இதில் மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவமனை நிா்வாகம் நடைபெற்ற விழாவுக்கு உடல்கூற்றியல் துறை பேராசிரியா் தண்டா் ஷீப், சமூகவியல் துறை இணை பேராசிரியா் சரவணன், மருத்துவா் செல்வராஜ் ஆகியோக் கூட்டாக தலைமை வகித்தனா். இதில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
ஊத்தங்கரையில்...
கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியா் வீரமணி தலைமை வகித்தாா். இதில், பொங்கல் திருவிழா, திருவள்ளுவா் பற்றிய சிறப்புகள், திருக்கு, விவசாயத்தின் முக்கியத்துவம், உழவா்களின் மேன்மை குறித்து மாணவா்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. புதுப்பானையில் பொங்கலிட்டு, செங்கரும்பு வைத்து படையலிட்டு கொண்டாடினா்.