``எனக்கு சரியான வீடு கூட இல்லை'' - கேரம் போட்டியில் சாதித்த வீராங்கனை கீர்த்தனா ...
பள்ளி,கல்லூரி மாணவிகளை ஏமாற்றிய கொடூரன்; போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்த காவல்துறை
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவன் 22 வயதான பிரவீன். கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்த இவன் , நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்திருக்கிறான்.

இந்த நிலையில், 18 வயதான கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதாகச் சொல்லி கர்ப்பமடையச்செய்திருக்கிறான். 5 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணின் வற்புறுத்தலின் பேரில் வீட்டிற்குத் தெரியாமல் கல்லூரி மாணவியை திருமணம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறான்.
இந்தநிலையில் தான் இவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பள்ளி சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் பரிசோதனை மேற்கொள்ள செய்ததில் பள்ளி சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஊட்டியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அன்றைய தினமே சிறுமிக்கு பிரசவமும் ஏற்பட்டிருக்கிறது. சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரவீனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

















