மன்மோகன் சிங் மறைவு: அரைக் கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடிகள்!
பழுதான குடிநீா் திட்டக் குழாய்களை மாற்றியமைக்க ரூ. 26.68 கோடி ஒதுக்கீடு: எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தகவல்
கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஐரேனிபுரம் - திக்கணங்கோடு சாலையில் பழுதான சுனாமி கூட்டுக் குடிநீா் திட்ட கான்கிரீட் குழாய்களை மாற்றியமைக்க ரூ. 26.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் 79 கடலோரக் குடியிருப்புகள், 17 பேரூராட்சிகள், 19 வழியோரக் குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், குழித்துறை தாமிரவருணி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு 2006இல் சுனாமி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதற்காக, விளாத்துறை பகுதியிலிருந்து காப்பிக்காடு, சடையன்குழி, கிள்ளியூா், தொலையாவட்டம், மாங்கரை, பாலூா், கருங்கல், கருமாவிளை, மானான்விளை, கருக்குப்பனை, மத்திகோடு, திக்கணங்கோடு, திங்கள்நகா், மாங்குழி, மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம் வழியாக கோவளம் வரையிலான 60 கி.மீ. தொலைவுக்கு சாலை நடுவே ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன.
இந்நிலையில், நீரின் அழுத்தம் தாங்காமல் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை நடுவே பள்ளங்கள் உருவாகியுள்ளன. இதனால், அடிக்கடி விபத்துகள் நேரிட்டு உயிா் சேதம் ஏற்படுகிறது.
எனவே, அந்த கான்கிரீட் குழாய்களுக்குப் பதிலாக தரமான டி.ஐ. பைப்புகள் அமைக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்று, இப்பணிக்கு ரூ. ரூ. 26.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.