செய்திகள் :

பழைய சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் எடுத்த சீனர்! - இது நமக்கு சாத்தியமா?

post image

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஹுயிஜோ நகரை சேர்ந்தவர் கியாவோ (Qiao).

இவர் பயன்படுத்தாத சிம் கார்டுகளில் இருந்து சுமார் 191 கிராம் தங்கத்தை பிரித்து எடுத்துள்ளதாக கூறி வெளியிட்ட வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

'உண்மையிலேயே சிம் கார்டில் தங்கம் இருக்கிறதா?' என்கிற கேள்வி இப்போது பலருக்கும் எழுந்துள்ளது.
தங்கம்
தங்கம்

சிம் கார்டுகள் மற்றும் மின்னணு கழிவுகளில் மிகச் சிறிய அளவில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மை தான்.

இதற்கு காரணம், தங்கம் எளிதில் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டது... இதற்கு அரித்துப்போகும் தன்மையும் கிடையாது.

சிம் கார்டுகளில் தங்கம் 'பயன்படுத்தப்படுகிறது' என்றாலும், ஒவ்வொரு சிம் கார்டிலும் சராசரியாக 0.02 முதல் 0.05 மில்லிகிராம் (அதாவது 0.00002 முதல் 0.00005 கிராம்) வரை மட்டுமே இருக்கும்.

அதனால், 191 கிராம் தங்கம் பெற பல்லாயிரக்கணக்கான சிம் கார்டுகள் தேவை.

கியோவோவிற்கு 191 கிராம் தங்கம் என்பது எப்படி சாத்தியமாகியது?

கியாவோ நீண்ட காலமாகவே பழைய சிம் கார்டுகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனக் கழிவுகளைச் சேமித்து வந்திருக்கிறார்.

சுமார் 2 டன் (2000 கிலோ) கழிவுகளில் இருந்து தான், 191 கிராம் தங்கத்தைப் பெற்றுள்ளார். இதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை. இதற்கு அரித்தல், வடிகட்டல், சூடாக்குதல் போன்ற பல படிநிலைகளுக்கு பின்பே, இந்தத் தங்கத்தைப் பெற்றுள்ளார்.

அப்படி அவர் பெற்ற தங்கத்தின் மதிப்பு சுமார் 200,000 யுவான் (இந்திய ரூபாயில் சுமார் 26–28 லட்சம்).

தங்கம்
தங்கம்

இதை அனைவரும் செய்யலாமா?

இது ஆபத்தான பிராசஸ் என்று கியோவோவே எச்சரித்திருக்கிறார். ஏதேனும் ஒரு பிராசஸ் தவறானாலும், விஷ வாயுக்கள் வெளியேறி உயிருக்கு ஆபத்தாகலாம் என்று எச்சரித்திருக்கிறார்.

மகனுக்கு எம்.பி பதவி; மனைவிக்கு தலைவர் பதவி - அஜித் பவார் மனைவி தேசியவாத காங்கிரஸ் தலைவராகிறார்!

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்வராகவும் இருந்த அஜித் பவார் கடந்த மாத இறுதியில் புனே அருகில் உள்ள பாராமதியில் நடந்த விமான விபத்தில் காலமானார். அவரின் மரணத்தை தொடர்ந்து அவர் வ... மேலும் பார்க்க

பொறியாளருக்கு 7 லட்சம்; மூத்த துப்புரவு தொழிலாளிக்கு ரூ.2 லட்சம்! - தெலங்கானா அரசு அறிவிப்பு

தெலங்கானா அரசு சமீபத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை வெகுவாக அதிகரித்து இருக்கிறது. தெலங்கானாவின் மின் துறையில் மூத்த பொறியாளராக இருக்கும் நபருக்கு மாதம் ரூ.7 லட்சம் சம்பளமாக வழங்கப்பட... மேலும் பார்க்க

ரூ.40,000 கோடி மோசடி: அனில் அம்பானியின் ரூ.3,700 கோடி வீட்டை பறிமுதல் செய்த அமலாக்கப்பிரிவு!

தொழிலதிபர் அனில் அம்பானி ரிலையன்ஸ் மொபைல் போனுக்காக ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, அதனை திரும்ப செலுத்தவில்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து இக்கடனை வாங்கிவிட்டு திரும்ப ... மேலும் பார்க்க

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சிறப்பு சர்வதேச கருத்தரங்கம்!

சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 16 பிப்ரவரி 2026 அன்று, தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கம... மேலும் பார்க்க

நீதித்துறையில் ஊழல்... NCERT பாடத்தில் சர்ச்சை : `திட்டமிட்ட தாக்குதல்' என சாடும் தலைமை நீதிபதி

8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில், "நீதித்துறை ஊழல்" என்ற பெயரில் புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ... மேலும் பார்க்க

சல்லடை, கூடைகளுடன் அஸ்தியில் தங்கத்தை தேடும் பொதுமக்கள் - கோதாவரி ஆற்றில் நடக்கும் தங்க வேட்டை

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் கோதாவரி ஆறு, பைதன் என்ற இடம் வழியாக செல்கிறது. இந்த பைதன் என்ற இடத்தில் பிரபல ஏகநாத் மகாராஜாவின் சமாதி இருக்கிறது. இந்த கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் தங்க வே... மேலும் பார்க்க