செய்திகள் :

பாக்யராஜ்: 'வெள்ளாங்கோயில் இருந்து கோடம்பாக்கத்துக்கு சினிமா கனவுகளைச் சுமந்தவர்' - பகிரும் கிராமம்

post image

தமிழ் திரையுலகின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகவும் திரைக்கதை மன்னராகவும் போற்றப்படும் பாக்யராஜ் அவர்களின் மறைவு திரையுலகம் மட்டுமின்றி அவரின் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்தி வரும் நிலையில், பாக்யராஜ் அவர்களின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள வெள்ளாங்கோயில் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி அவரின் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

வெள்ளாங்கோயில்
வெள்ளாங்கோயில்

பாக்யராஜ் நினைவுகள் குறித்து தெரிவிக்கும் வெள்ளாங்கோவில் கிராம மக்கள், "இந்த ஊரில்தான் அவர் பிறந்தார். பக்கத்தில் இருக்கக்கூடிய பள்ளியில்தான் சில ஆண்டுகள் படித்தார்.‌ சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபராக உயர்ந்தார். சினிமாத்துறையில் உச்சத்தில் இருந்த போதும் சொந்த ஊரான வெள்ளகோயிலை அவர் ஒருபோது மறந்ததில்லை.

எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். கோயில் திருப்பணிகளுக்கும் நிறைய நன்கொடைகளை அளித்திருக்கிறார். அதேபோல சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் மருத்துவம், கல்வி தேவைகளுக்கும் நிறைய உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறார்.

வெள்ளகோயிலில் இருந்து கோடம்பாக்கத்திற்கு சினிமா கனவுகளைச் சுமந்துச் சென்று பெரிய ஆளுமையாக உயர்ந்த கே.பாக்யராஜ் அவர்களின் புகழும் நினைவுகளும் என்றைக்கும் பசுமை மாறாமல் எங்கள் கிராமத்தில் நிலைத்திருக்கும் " என்றனர்.

What To Watch: 'Con City' முதல் 'அவதார்' வரை; இந்த வாரம் வெளியான படங்கள் & சீரிஸ்கள் லிஸ்ட்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்.கான் சிட்டி - தமிழ்ஹரீஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, ராதா ரவி, சாக்ஷி வைத்யா, வடிவுக்கரசி, வி... மேலும் பார்க்க

பாக்கியராஜ்: காலை 9 மணிக்குத் தொடங்கும் இறுதி ஊர்வலம்; அரசு மரியாதையுடன் உடல் தகனம்| Live Updates

அரசு மரியாதையுடன் பாக்கியராஜின் உடல் தகனம்!இந்தியத் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' என்று என்றழைக்கப்படும் கே. பாக்கியராஜ் நேற்று (ஜூன்.27) மாரடைப்பால் காலமானார். 'சுவரில்லாத சித்திரங்கள்' மூலம் இயக்கு... மேலும் பார்க்க

பாக்யராஜ் : `உதவியாளர்களை ‘முருகா’ன்னு தான் அழைப்பார்!' - ‘பாக்யா’ அனுபவம் பகிரும் தஞ்சை ரவிராஜ்

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிற சூழலில், பாக்யராஜ் குறித்து அவர் நடத்தி வந்த ‘பாக்யா’ இதழில் ... மேலும் பார்க்க

Bhagyaraj: `இசையமைப்பாளர் பாக்யராஜ்' - `இது நம்ம ஆளு' டு `ஞானப்பழம்' படம் - சுவாரஸ்ய தகவல்!

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவு தமிழ் திரையுலகினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குடும்பப் பின்னணியைக் கொண்ட அவரின் படங்கள் பல... மேலும் பார்க்க

பாக்யராஜ் : `கதாசிரியர் எழுத்தாளர்களின் வசனங்களுக்கும் காப்பிரைட் கிடைக்க போராடினார்'- 'யார்'கண்ணன்

திரைக்கதை பிதாமகர் என்றழைக்கப்படும் கே.பாக்யராஜ், மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 73. இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பத்திரிகை அதிபர், பத்திரிகையாசிரியர், எழுத்தாளர் என்ற பன்மு... மேலும் பார்க்க