செய்திகள் :

பாஜக கூட்டணியில் தவெக? "EPS-ஸிடம்தான் கேட்க வேண்டும்; ஏனென்றால்" - பியூஸ் கோயலின் பதில் என்ன?

post image

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று (மார்ச். 10) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பு இருக்கிறதா?' என்று கேட்கப்பட்டிருக்கிறது.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

அதற்குப் பதிலளித்த அவர், "இதைப் பற்றி நீங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்க வேண்டும்.

அவருக்குத்தான் இது குறித்து நன்றாகத் தெரியும். இதுவரைக்கும் எங்கள் கூட்டணியில் எடப்பாடி, நயினார், தினகரன், அன்புமணி, ஜி.கே வாசன் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள்.

நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தியிருக்கிறோம். தமிழக மக்களின் நலனுக்காக ஒரு வலுவான கூட்டணியாக நாங்கள் தேர்தலைச் சந்திப்போம்.

 பியூஸ் கோயல்
பியூஸ் கோயல்

திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்தாலும் கட்சிகளின் எண்ணிக்கையை விட மக்களிடம் இருக்கும் செல்வாக்கும், வாக்கு வங்கியும்தான் முக்கியம். அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.

`எங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம்..!' - அன்புமணி ராமதாஸ்

தங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார். தாம்பரத்தில் நேற்று (மார்ச்.10) பாமக சார்பில் மகளிர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ந... மேலும் பார்க்க

கோவை: அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு - அதிர்ச்சி பின்னணி!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்துள்ளது. இதை அறியாமல் உணவருந்திய மாணவ, மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ... மேலும் பார்க்க

10ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் - அரசுப் பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை கடித்த வெறி நாய்!

தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக இன்று காலை பள்ளிக்கு சென்றனர். தேர்வு தொடங்குவதற்கு முன்... மேலும் பார்க்க

அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலாகும் ஈரான் 'டிரோன்கள்' - உக்ரைனுக்கு 'நோ' சொன்ன விளைவு இது!

அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே வளர்ச்சி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மிகப்பெரிய நாடுகள். இந்த விஷயங்களில் ஈரானை ஒப்பிட்டால், அதற்குக் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும். ஆனாலும், 12 நாள்களாகப்... மேலும் பார்க்க

'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்!' - திமுகவிடம் துரை வைகோ சரண்டர்?

திமுக கூட்டணியில் இன்னும் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் இடங்களுக்கும் திமுக தர விரும்பும் இடங்களுக்கும் ஒத்துப்போகாததால் இழுபறி நிலவுகிறது... மேலும் பார்க்க