"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி
"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, "த.வெ.க தலைவர் விஜய் ஆச்சரியகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, அவர் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய இலக்கு தேர்தல் குறி. யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு இல்லை.
பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய்
எங்களுக்கு போட்டியும் யாரும் இல்லை. களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம். எங்களுக்கு அரசியல் எதிரி தான். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு யாரோடு எந்த பகைமையும் கிடையாது. தமிழகத்தை வாழ வைக்க தி.மு.க-வால் தான் முடியும். பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய். த.வெ.க என்பது பா.ஜ.க-வின் சி டீம். ஒரு காலத்தில் ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள் இன்று அரசியல் களத்திற்கு வந்துள்ளனர்.

எல்லாவற்றையும் முடிவெடுத்து தான் நாங்கள் சொல்கிறோம். தேர்தல் அறிக்கையை கொடுக்கிறோம். நாங்கள் கடந்த காலங்களில் கொடுத்த டி.வி இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதன் பின்பு கொடுத்தவர்கள் கொடுத்தவை தகர டப்பா ஆகிவிட்டது. அறிவுத் திருவிழா என்பது தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை திராவிட இயக்கத்தின் வரலாற்றை இன்றைய இளைய தலைமுறைகள் அறிய செய்வது என்பதை வலியுறுத்தி நாங்கள் நடத்திய திருவிழாவே. அவர்களுக்கு அவற்றையெல்லாம் பற்றிய புரிதல் எல்லாம் கிடையாது. அக்கறை கிடையாது. அவர்களுடைய ஒரே நோக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான்.
தமிழ் மக்கள் பற்றியோ, தமிழர்களின் வரலாற்றைப் பற்றியோ கொள்கைகளைப் பற்றியோ கோட்பாட்டை பற்றிய எதைப் பற்றியும் அவர்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது. விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தங்களைத் தானே தரம் தாழ்த்திக் கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் அவர்களைப் பற்றி நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்?. ஏன் எதிர்வினை ஆற்ற வேண்டும், காங்கிரஸில் இருந்து எங்களோடு பேசுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது, அதற்குப் பிறகு கூட்டணி குறித்த கேள்வி தேவை இல்லாதது. சிண்டு மூட்டுகிற வேலையை யார் செய்தாலும் அது எங்கும் எடுபடாது" என்றார்.















