செய்திகள் :

பாஜக-விலிருந்து விலகிய நடிகர் தேவன் தவெக-வில் இணைகிறாரா? விஜய்யைச் சந்திக்க காரணம் என்ன?

post image

கேரளாவைச் சேர்ந்த பிரபல வில்லன் நடிகர் தேவன், தமிழில் ஏராளமான சினிமாக்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் சுமார் 30 சினிமாக்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர் தேவன் அரசியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 2004-ல் நவகேரள பீப்பிள்ஸ் பார்ட்டி என்ற கட்சியைத் தொடங்கினார். 2021 மார்ச் மாதம் பா.ஜ.க-வில் சேர்ந்த தேவன், அவரது கட்சியையும் பா.ஜ.க-வுடன் இணைத்தார். பா.ஜ.க-வில் மாநிலத் துணைத்தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே ​ஆகஸ்ட் 16 அன்று கணிக்சுகுளங்கரை தேவி கோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக நடிகர் தேவன் அறிவித்தார். பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் அவர் ராஜினாமா செய்தார்.

நடிகர் தேவனின் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால், ராஜினாமா முடிவில் தேவன் உறுதியாக இருந்தார். இந்த நிலைய கேரளத்தில் த.வெ.க கட்சியில் தீவிரமாக இயங்கிவரும் சதீஷ் தோந்நய்க்கல் என்பவர் நடிகர் தேவனை சாலக்குடியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார்.

தேவனுக்கு கட்சித் துண்டை அணிவித்து அவரை த.வெ.க-வுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். மேலும், த.வெ.க கட்சியில் இணைய நடிகர் தேவன் விருப்பம் தெரிவித்துள்ளதாக சதீஷ் தோந்நய்க்கல் தெரிவித்திருந்தார். 

நடிகர் தேவன்
நடிகர் தேவன்

இந்த நிலையில் ​பா.ஜ.க-விலிருந்து விலகிய நடிகர் தேவன் விரைவில் விஜய்யைச் சந்தித்து த.வெ.க-வில் இணைய உள்ளதாகவும், அவருக்கு கேரள மாநிலத்தின் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் செப்டம்பர் 10 அன்று சென்னை வந்து முதல்வர் விஜய்யை தேவன் நேரில் சந்திக்கவுள்ளதாகவும், இந்தச் சந்திப்பிற்குப் பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

த.வெ.க-வில் இணைய தயாராகியுள்ளார் நடிகர் தேவன்
த.வெ.க-வில் இணைய தயாராகியுள்ளார் நடிகர் தேவன்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தேவன், "நான் த.வெ.க-வில் இணைவதற்காக பா.ஜ.க-விலிருந்து விலகவில்லை. ராஜினாமா செய்த பின்னரே த.வெ.க தரப்பினர் என்னை அணுகி, விஜய்யைச் சந்திக்கும்படி விருப்பம் தெரிவித்தனர்.

அதற்காக செப்டம்பர் 10 அன்று சென்னை செல்கிறேன். கடந்த 2004-ல் நான் முன்வைத்த அரசியல் கொள்கைகளும் விஜய்யின் கொள்கைகளும் ஒன்றுபட்டுப் போகின்றன" என்றார்.

நடிகர் தேவனின் வருகை கேரள மாநிலத்தில் த.வெ.க-வுக்குப் பலம் சேர்க்கும் என சதீஷ் தோந்நய்க்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க