செய்திகள் :

`பாட்டு கேட்டால் மாடுகள் அதிகம் பால் கறக்குமா?' - அறிவியல் சொல்லும் உண்மை இதுதான்!

post image

மனிதர்களுக்குத் தான் இசை ரசனை இருக்கும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் பசுக்களுக்கும் இசை மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக 'ஜாஸ்' (Jazz) போன்ற மென்மையான இசை வடிவங்களை பசுக்கள் விரும்பி ரசிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது கேட்பதற்கு ஏதோ கார்ட்டூன் கதை போலத் தோன்றினாலும், இதன் பின்னணியில் அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது. அது என்ன என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

கறவை மாடுகள் மற்றும் கால்நடைகளின் மனநிலை, நடத்தை மற்றும் உற்பத்தித்திறனை இசை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து விலங்கு நல நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

cow

பசுக்கள் மனிதர்களைப் போல இசையை ரசிக்கின்றனவா என்று கேட்டால், இல்லை என்றும், மாறாக அவை குறிப்பிட்ட வகையான சத்தங்கள் மற்றும் ரிதங்களால் அமைதிப்படுத்தப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

'அனிமல்ஸ்' (Animals) என்ற இதழில் வெளியான ஒரு ஆய்வின்படி, அமைதியான மற்றும் மெதுவான தாளம் கொண்ட இசை, கால்நடைகளின் இதயத் துடிப்பைக் குறைக்கவும், அவற்றின் பதற்றத்தைத் தணிக்கவும் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

பசுக்கள் அமைதியாக இருக்கும்போது அவற்றின் பால் உற்பத்தி மற்றும் உடல்நலம் சீராக இருப்பதாகவும், இதனால் மென்மையான இசை, குறிப்பாக ஜாஸ் இசை, இந்த விஷயத்தில் முக்கிய இடம் பிடிப்பதாக கூறப்பட்டுள்ளது.

பால் பண்ணை விவசாயிகள், பால் கறக்கும் நேரங்களில் மென்மையான இசையை இசைக்க விடுவது வழக்கம். அத்தகைய நேரங்களில் பசுக்கள் மிகவும் ஒத்துழைப்புடன் இருப்பதாகவும், பதற்றமில்லாமல் அமைதியாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜாஸ் இசையில் இருக்கும் மெதுவான மற்றும் சீரான தாளம், பசுக்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்குகிறது. இது பசுக்கள் இசையை ரசிப்பதனால் அல்ல; மாறாக அந்த ஒலிச் சூழல் அவற்றிற்கு இதமாக இருப்பதனாலேயே நிகழ்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

மாடு

ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, பசுக்களுக்கு 'ராக்' அல்லது வேகமான எலக்ட்ரானிக் இசை போன்றவை பிடிப்பதில்லை. அதிக சத்தம் மற்றும் வேகமான தாளங்கள் அவற்றை மிரளச் செய்யலாம், பதற்றமடையச் செய்யலாம்.

ஆனால் ஜாஸ், கிளாசிக்கல் அல்லது இயற்கையான மெல்லிசை போன்ற இசை வடிவங்கள் அவற்றை சாந்தப்படுத்துகின்றன. எனவே, இது இசை வகையைப் பற்றியது அல்ல; அதன் வேகம் மற்றும் தொனிப்பொருள் பற்றியது என்று குறிப்பிட்டுள்ளனர்.

மனிதர்களைப் போல பூச்சிகளுக்கும் மன அழுத்தம் ஏற்படும்; ஆய்வில் வெளியான தகவல்

எறும்புகள், தேனீக்கள், வண்டுகள் என சிறய வகை பூச்சிகளுக்கும் மனிதர்களைப் போலவே வலி, மகிழ்ச்சி மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்வுகள் இருக்கலாம் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.பூச்சிகள், உள்ளுணர்வு அட... மேலும் பார்க்க

குரல் இனிது... ஆனால் குணம்? - ராஜதந்திரிகளான குயில்களின் மறுபக்கம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Amur Falcon: 150 கிராம்தான் எடை; இந்தியா டு சோமாலியா - 5 நாள்களில் 5000 கி.மீ பயணித்த அமூர் பருந்து

பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கிலோமீட்டர் வலசை செல்வதை நாம் அறிவோம். இந்த வலசை நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு சாகசங்கள் நிறைந்தது, சவாலானது, அதீத பொறுமையையும் உழைப்பையும் விடா முயற்சியையும்... மேலும் பார்க்க

சீனா: "இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 ஆண்டுகள் வாழலாம்" - சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு!

சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ்வதற்கான ஆராய்ச்சிகள் குறித்து பேசியதாக பரபரப்பாக பேசப்... மேலும் பார்க்க

பாகுபலி ராக்கெட்: `இந்தியாவுக்கு மற்றொரு பெருமை' - விண்ணில் வென்ற செயற்கைகோள் குறித்து இஸ்ரோ தலைவர்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மாலை 5.26 மணிக்கு CMS-03, LVM3-M5 செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு எல்.வி.எம் 3 - எம்5 ராக்கெட் விண்ணை நோக்கிப் புறப்பட்டது.43.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் 18 ஆயிரம்... மேலும் பார்க்க