ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
பாமக: `ஏன் அன்புமணியின் கூட்டணி பேச்சுவார்த்தை செல்லாது?' - ராமதாஸ் வழக்கறிஞர் விளக்கம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாமக தலைவர் அன்புமணியும் அறிவித்த கூட்டணி செல்லுமா என்பது குறித்து ராமதாஸின் வழக்கறிஞர் அருள் பேசியதாவது...
"மருத்துவர் ஐயா (ராமதாஸ்) பா.ம.க-வின் தலைவராக இருக்கும் பட்சத்தில், விதி 13-ன் படி, அவரது ஆலோசனை, அனுமதி இல்லாமல், எந்தக் கூட்டமும் நடத்தப்படக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதை மதிக்காமல், நடைப்பயணம் செய்வது, பொதுக்குழு கூட்டுவது சட்டத்திற்குப் புறம்பானது... கட்சிக்குப் புறம்பானது என்று தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம்.
அதை திரித்து நாங்கள் தலைவர் பதவிக்காக வழக்கு போட்டோம் என்று கூறுகிறார்கள்.

17/8/2025-ல் இருந்து மருத்துவர் ஐயா தான் தலைவர். ஆனால், அதற்கு முன்பு, முந்திக்கொண்டு... போட்டி போட்டுக்கொண்டு 9/8/2025-ல் கூட்டம் ஒன்றை நடத்தினார் அவர்.
இது தவறு என்று தான் வழக்கு போட்டோம்.
28/5/2022-ல் இருந்து 28/5/2025 வரையிலேயே அன்புமணியை தலைவராக தேர்ந்தெடுத்திருந்தார் ஐயா.
இதை மறைக்கத் தான் ஊழல் செய்து கூட்டம் நடத்தினார் அன்புமணி.
21/6/2023 - 21/6/2026 வரையில் அன்புமணி பாமகவின் தலைவராக தொடர்வார். அதை பொதுக்குழு ஒப்புக்கொண்டுள்ளது என்று மோசடி செய்து ஆவணம் ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் அன்புமணி தந்துள்ளார்.
அதை ஒப்புக்கொண்டு தேர்தல் ஆணையமும் ஆவணம் ஒன்றை அன்புமணிக்கு கொடுத்துள்ளது. கட்சியின் நிறுவனர் என்கிற முறையில், ஐயாவிற்கு அந்த ஆவணத்தைக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இன்னொன்று, தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள ஆவணத்தில், யாராவது இந்தக் கட்சியின் தலைவர் என்று பேச்சை எழுப்பினாலே, அன்புமணி தலைவர் என்பது செல்லாது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பாமக தலைமை வழக்கின் விசாரணையின் போது, டெல்லி உயர் நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம், அன்புமணியை தலைவராக அங்கீகரிக்கும் உரிமை எங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

17/12/2025-ல், நீங்கள் தலைமையைக் கோரியுள்ளதால், கட்சியின் உட்கட்சி அமைப்பு படி முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நீங்கள் தலைவராகலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியது.
அதன் படி, தலைமை நிர்வாகக்குழு, பொதுக்குழு, செயற்குழு என அனைத்திலும் ஐயா தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஆக, இப்போது ஐயா தான் தலைவர். கட்சியின் விதி 31-ன் படி, ஐயா மட்டுமே நிறுவனராகவும், தலைவராகவும் இருந்து தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய உரிமை உள்ளது.
மற்றவர்கள் பேசும் கூட்டணி செல்லாது. அது நீதிமன்ற அவமதிப்பாகும்".
















