செய்திகள் :

பாமக: "ஐயா ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்குச் சமம்" - ஸ்ரீகாந்தி காட்டம்

post image

பா.ம.க கட்சியில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், சேலத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் இன்று (டிச. 29) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில், பா.ம.க தலைவராக இருந்த அன்புமணியின் பதவிக்காலம் மே 29-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும், அதனால், பா.ம.க-வின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும், தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாமக அன்புமணி
பாமக அன்புமணி

தொடர்ந்து, பாமகவின் ஜி.கே. மணியை கட்சியில் இருந்து நீக்குவதாகக் கூறிய அன்புமணிக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாமக செயல்தலைவராக ஶ்ரீகாந்தியும், கௌரவத் தலைவராக ஜிகே மணியும், பொதுச்செயலராக முரளிசங்கரும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்தப் பொதுகூட்டத்தில் ஶ்ரீகாந்தி உரையாற்றினார். அப்போது, ``இவ்வளவு தூரம் நாம் பயணித்து வந்திருப்பது பணத்துக்காவோ, பதவிக்காகவோ, அல்லது சில கும்பல் போல நாடகம் ஆடவோ அல்ல. நம் சமூகத்திற்காக இத்தனை ஆண்டுகள் போராடிய நன்றி உணர்ச்சி.

இப்போது ஒரு மகளாக, வன்னிய குல தமிழச்சியாக நியாயம் கேட்க வந்திருக்கிறேன். இன்று காலை அப்பாவின் முகத்தைப் பார்த்தேன்.

40 ஆண்டுகாலம் அரசியலில் கோலோச்சியவரின் கண்ணில் வலி தெரிந்தது. தான் பெற்று, மாரோடு அரவணைத்து வளர்த்த மகன் முதுகில் குத்திய வலி அது. ஐயாவை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி, கேவலப்படுத்திப் பேசுகிறார்கள். ஐயாவின் கட்சியை அவரிடமிருந்தே பிடுங்குகிறார்கள். இதற்கு மேலும் நாம் பொறுமையாக இருக்க முடியாது.

ராமதாஸ் - ஸ்ரீகாந்தி
ராமதாஸ் - ஸ்ரீகாந்தி

ஐயாவை கேள்வி கேட்க நீ யார்? உனக்கு என்ன தகுதி இருக்கிறது. நீ இப்போது காரில் கோர்ட் போட்டுக்கொண்டு ஊர் சுற்றுகிறாயே அது என்ன உன் உழைப்பா? நீ படித்து வாங்கின டாக்டர் பட்டம், எம்.பி பதவி, அமைச்சர் பதவி இதெல்லாம் நீ உழைச்சு வாங்குனதா...

இது ஐயா உங்களுக்குப் போட்ட பிச்சை. ஐயா இல்லாத பா.ம.க பிணத்துக்கு சமம். அந்தப் பிணத்தை வச்சு அரசியல் பண்ணலாம்னு அன்புமணி டீம் நினைக்கிறது. ஆனால் இந்த ஸ்ரீகாந்தி உயிரோடு இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது" என ஆவேசமாகப் பேசினார்.

`ஆரம்பிக்கலாங்களா..!' - கோவையில் வேலுமணி கேம் ஸ்டார்ட் - செந்தில் பாலாஜி ஷாக்!

தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். கோவை மாவட்டம் அதிமுகவின் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்தமுறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக தீவிரமா... மேலும் பார்க்க

"அவருக்கு கோபம், மனக்கசப்புகள் இருந்தாலும்கூட..!"- டிடிவி NDA கூட்டணியில் இணைந்தது குறித்து அண்ணாமலை

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (ஜன.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்."அண்ணன் டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்... மேலும் பார்க்க

`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்!

நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ர... மேலும் பார்க்க

`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' - எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி... மேலும் பார்க்க

"ஜெயலலிதாவின் படத்தை அகற்றுவாயானு கேட்டார்; அதனால்" - அரசியலிலிருந்து விலகும் குன்னம் ராமச்சந்திரன்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி முன்னாள்உறுப்பினரும், ஓ.பி.எஸ்ஸின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் அம்மா பேரவை மாநிலச் செயலாளர் செயலாளருமாகச் செயல்பட்டு வந்தார் ஆர்.டி.ராமச்சந்தி... மேலும் பார்க்க