செய்திகள் :

பாம்பு கடியால் துடித்த சிறுமி; சட்டென செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய எஸ்.ஐ-க்கு குவியும் பாராட்டு!

post image

தஞ்சாவூர், கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் கவிதா. இவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் நேற்று மாலை, பெரிய கோயிலுக்கு வந்தார். கேரளாந்தகன் வாயிலுக்கும், ராஜராஜன் வாயிலுக்கும் இடையிலுள்ள புல் தரையில் கவிதாவும் இரண்டு பெண் குழந்தைகளும் அமர்ந்துள்ளனர். சிறுது நேரத்திற்குப் பிறகு இரண்டு குழந்தைகளும் அந்த இடத்தில் விளையாடியுள்ளனர். அப்போது, இரண்டு பேரில் நித்யஸ்ரீ(8) என்பவரை பாம்பு கடித்தது. இதையடுத்து நித்யஸ்ரீ வலியால் துடிக்க, அதிர்ச்சியில் கவிதா பதறியுள்ளார்.

ராஜகண்ணனை பாராட்டிய எஸ்.பி

உடனே அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். பெரியகோயில் முன்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். இதனால் ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டது. கோயிலுக்கு எதிரே போக்குவரத்து எஸ்.ஐ ராஜகண்ணன் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சிறுமியை பாம்பு கடித்த விஷயம் அவருக்கு தெரிந்தது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸ்க்காக காத்திருக்காமல் சமயோஜிதமாக யோசித்து சட்டென தனது டூவீலரில் பாம்பு கடித்த சிறுமி நித்யஸ்ரீயை ஏற்றிக்கொண்டு சென்றவர்... தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

இதையடுத்து சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்த மருத்துவர்கள் தாமதிக்காமல் சிறுமியை அழைத்து வந்த ராஜகண்ணனை பாராட்டினர். இதையடுத்து கவிதா, ராஜகண்ணனை கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டுள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக நித்யஸ்ரீ தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நித்யஸ்ரீ நலமுடன் இருக்கிறார். எஸ்.ஐ ராஜகண்ணன் நித்யஸ்ரீயை டூவீலரில் அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது செயலை அறிந்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையடுத்து இன்று எஸ்.பி.,ராஜராஜம், எஸ்.ஐ ராஜகண்ணணை நேரில் அழைத்து துரிதமாக செயல்பட்டதற்கு தட்டிக் கொடுத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினர். இதைத் தொடர்ந்து சக போலீஸாரும் அவரை பாராட்டினர். இது குறித்து எஸ்.ஐ ராஜகண்ணன் கூறுகையில், ``சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே எனக்கு இருந்தது. உரிய சிகிச்சைக்கு பிறகு சிறுமி நலமுடன் இருக்கிறார். என்னால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதை நினைக்க பெரும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

`கூட்டணி ஆட்சியா தமிழகத்தில்?' - 'ஷாக்' கொடுத்த சந்தோஷ் - பாஜக கூட்டத்தில் நடந்தது என்ன?

``அ.தி.மு.க தலைமையில் அணி அமைத்தாலும், தமிழகத்தில் தேசிய ஜனநாய கூட்டணியின் ஆட்சியே நடக்கும்.” என்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருக்கிறார் பா.ஜ.க-வின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பி.எல்.சந்தோஷ்.தமிழ... மேலும் பார்க்க

`அதிமுக ஆட்சியாக இருந்தால் `ஜனநாயகன்' படம் எப்போதோ வெளியாகியிருக்கும்!' - சொல்கிறார் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவரின் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட த.வெ.க-வினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர்ராஜூ முன்னிலையில் தங்களை அ.தி.மு... மேலும் பார்க்க

TNPSC: `இந்த தேதியில் நடக்கும்' - ரத்தான குரூப் 2, 2A தேர்வுகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் நேற்று (பிப்.8) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டது.தேர்வு ஒத்திவைப்பால் தேர்வர்க... மேலும் பார்க்க

'துண்டுச் சீட்டை பார்த்து வாசிக்கும் ரோபோ!' - முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடும் ஆதவ் அர்ஜூனா

TNPSC தேர்வு ரத்தான விவகாரம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள் பாதுகாப்புப் போன்றவற்றை பற்றி தவெக-வின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.ஆத... மேலும் பார்க்க

$500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? - பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம்

`அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளைச் செய்யும்' இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய புள்ளிகளில் ஒன்று இது. 2... மேலும் பார்க்க

``உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்குத் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது!’’ - ஸ்டாலின் பெருமிதம்

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் `டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் `ஜாகுவார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாகனங்களின் உற்பத்தி ஆலை அமைக்க கடந்த 20... மேலும் பார்க்க