செய்திகள் :

பாரதிராஜா - பாக்யராஜ் காம்போ: இருவருக்குமே முதல் திரைப்படம் 'முந்தானை முடிச்சு' தான்!

post image

தமிழ் திரையுலகில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் விரல்களைப் பிடித்து தான் தனது பயணத்தைத் தொடங்கினார் பாக்யராஜ்.

ஆம்... 1977-ம் ஆண்டு வெளிவந்த '16 வயதினிலே' திரைப்படம் தான் பாரதிராஜா, பாக்யராஜ் இருவருக்கும் முதல் திரைப்படம். ஆனால் என்ன... பாரதிராஜா அந்தத் திரைப்படத்தின் இயக்குநர்... அதில் பாக்யராஜ் உதவி இயக்குநர்.

16 வயதினிலேயில் பாக்யராஜ் ஒரு கேமியோ ரோல் கூட செய்திருக்கிறார்.

அதன் பிறகு, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் திரைப்படங்களிலும் இவர்களது இயக்குநர் - உதவி இயக்குநர் காம்போ தொடர்ந்திருக்கிறது.

16 வயதினிலே
16 வயதினிலே

பாரதிராஜாவின் 'புதிய வார்ப்புகள்' படத்தின் திரைக்கதை எழுத்தாளர் பாக்யராஜ் தான்.

அதன் பிறகு, 1979-ம் ஆண்டு 'சுவரில்லாத சித்திரங்கள்' திரைப்படம் மூலம் பாக்யராஜ் தமிழ் திரையுலகில் இயக்குநராக என்ட்ரி கொடுத்து, வெற்றி நடை போட தொடங்கினார். கூடவே, நடிகராகவும் கலக்கி வந்தார்.

இயக்குநர், நடிகர் என வலம் வந்துகொண்டிருந்த நேரத்திலும், 1985-ம் ஆண்டு பாரதிராஜா - பாக்யராஜ் காம்போ ஒன்று சேர்ந்தது. அந்த ஆண்டு வெளியான 'ஒரு கைதியின் டைரி' திரைப்படத்தின் இயக்குநர் பாரதிராஜா... திரைக்கதை எழுத்தாளர் பாக்யராஜ்.

அதற்கு முன்பு, 1984-ம் ஆண்டில், பாக்யராஜின் 'தாவணி கனவுகள்' திரைப்படத்தில் இயக்குநராகவே நடித்திருந்தார் பாரதிராஜா.

அதன் பிறகு, இருவரும் திரைப்படங்களில் ஒன்றிணையவில்லை என்றாலும், ஆஃப் கேமராவில் இவர்களது அன்பு தொடர்ந்துகொண்டே தான் இருந்தது.

'குரு' பாரதிராஜா இறந்த 17 நாள்களில் 'சிஷ்யர்' பாக்யராஜும் காலமாகியுள்ளது தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

Bhagyaraj: திரைக்கதை மன்னனை ஈர்த்த திரைக்கதையாசிரியர்கள்! - பாக்யராஜ் பகிர்வு

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் கே. பாக்யராஜ். பாக... மேலும் பார்க்க

Bhagyaraj: "எப்படிச் சுயமா போராடி வந்தேனோ அதே மாதிரி வரட்டும்னு எம்.ஜி.ஆர் சொன்னார்" - பாக்யராஜ்

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாக்யராஜை, எம்.ஜி.ஆர் தன்னுடைய கலையுலக வாரிசு எனக் குற... மேலும் பார்க்க

Bhagyaraj: "கமல், ரஜினிக்கு இருக்கிற ப்ளஸ் பாயிண்ட் எனக்குக் கிடையாது!" - பாக்யராஜ் பகிர்வு

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாக்யராஜ் நடித்த படங்களில் சண்டைக் காட்சிகளோ, பிரமாண்ட... மேலும் பார்க்க

Bhagyaraj: திரைக்கதை மன்னன்; அமிதாப் பச்சனின் அழைப்பு - பாக்யராஜ் பற்றிய முக்கிய தகவல்கள்!

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமானார். இவருடைய மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 'திரைக்கதை மன்னன்' என அழைக்கப்பட்டவர். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகத் தனது சினி... மேலும் பார்க்க

'என்ன சொல்வதென தெரியவில்லை; முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை' - ஊர்வசி வேதனை | பாக்யராஜ் | Live

ஊர்வசி இரங்கல்இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார் . 'முந்தனை முடிச்சு' திரைப்படம் மூலம் இவர் தான் நடிகை ஊர்வசியைத் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.பாக்யராஜ... மேலும் பார்க்க

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் காலமானார்: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி

'திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்படுபவர் கே.பாக்யராஜ். தமிழ் சினிமாவின் தலைசிறந்த கதைசொல்லி மற்றும் இயக்குநரான கே. பாக்யராஜ், நகைச்சுவை, எதார்த்தம் மற்றும் சமூகக் கருத்துக்கள் நிறைந்த பல காலத்தால் அழி... மேலும் பார்க்க