செய்திகள் :

பாராகிளைடர் மீது மோதிய விமானம் - அவசர பாராசூட் மூலம் உயிர் தப்பிய பெண்; பதறவைக்கும் வீடியோ

post image

ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் வானில் பறந்து கொண்டிருந்த பாராகிளைடர் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில், பாராகிளைடரின் இறக்கை கிழிந்து சுழன்று கீழே விழுந்தபோதும், சமயோசிதமாக செயல்பட்ட பெண் தனது அவசர கால பாராசூட்டைப் பயன்படுத்தி காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த பதறவைக்கும் தருணங்கள் அவர் பொருத்தியிருந்த கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த சனிக்கிழமை மதியம், வடக்கு ஆஸ்திரியாவில் பாராகிளைடிங் செய்வதற்கு பிரபலமான இடமான ஷ்மிட்டன்ஹோஹே மலைக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சப்ரினா (44) என்ற அனுபவம் வாய்ந்த பாராகிளைடர், தனது உடையில் கேமராவைப் பொருத்தியபடி வானில் பறந்து கொண்டிருந்தார். அப்போது, சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று, எதிர்பாராதவிதமாக சப்ரினாவின் தலைக்கு சில அடிகள் மேலே, அவரது பாராகிளைடரின் மீது நேராக மோதியுள்ளது.

சப்ரினா பதிவு செய்த கோணத்தில் (first-person footage) எடுக்கப்பட்ட அந்த காணொளியில், விமானம் மோதியவுடன் பாராகிளைடரின் இறக்கைப் பகுதி இரண்டாகக் கிழிவது தெளிவாகத் தெரிகிறது. அடுத்த கணமே கட்டுப்பாட்டை இழந்த அவர், அலறியபடி அதிவேகமாக சுழன்று தரையை நோக்கி விழத் தொடங்கினார். பிரதான பாராசூட் முற்றிலும் சேதமடைந்த நிலையில், சிறிதும் தாமதிக்காமல் தனது அவசர கால பாராசூட்டை இயக்கி, பத்திரமாக தரையிறங்கினார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆஸ்திரிய காவல்துறை, ஹெலிகாப்டர் மூலம் அவரை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்காக உள்ளூர் விமான நிலையத்திற்கு கொண்டு சென்றது. "மோட்டார் விமானத்தின் புரோபெல்லர் (propeller) பாராகிளைடரை கடுமையாக சேதப்படுத்தியது. இதனால், அனுபவம் வாய்ந்த அந்த பாராகிளைடர் தனது அவசர கால பாராசூட்டை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது," என சால்ஸ்பர்க் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் செஸ்னா 172 ரக விமானத்தை இயக்கிய 28 வயது விமானியும், விமானத்தை செல் ஆம் சீ விமான நிலையத்தில் (Zell am See Airport) பாதுகாப்பாக தரையிறக்கினார். தன்னால் இந்த மோதலை தவிர்க்க முடியவில்லை என அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக, இந்த கோர விபத்தில் சப்ரினா மற்றும் விமானி ஆகிய இருவருமே பலத்த காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

விபத்திற்குப் பிறகு, சப்ரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "சில மோசமான காயங்கள் மற்றும் சிராய்ப்புகளைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் இங்கு அமர்ந்து இதை தட்டச்சு செய்கிறேன் என்பதே ஆச்சரியமாக உள்ளது," என்று ஜெர்மன் மொழியில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம், பொது வான்வெளியில் நிலவும் அபாயங்களையும், இதுபோன்ற சாகச விளையாட்டுகளில் அவசர கால உபகரணங்களின் முக்கியத்துவத்தையும் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது.

‘எனக்கு என்ன பிடிக்கும்னு யோசித்ததே இல்லை!’ - தாய்லாந்தில் தன்னைத் தேடிய இந்திய பெண்ணின் கதை

ஒரு பெண்ணின் உலகம் எதுவரை? வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடும் பொறுப்புகள்தானா அல்லது கண்டங்கள் கடந்து விரியும் எல்லையற்ற வானமா? இந்தக் கேள்விக்குத் தன் ஒற்றை நாள் பயணத்தின் மூலம் பதில் சொல்லி... மேலும் பார்க்க

கோர்ட்டில் விவாகரத்து ஆவணங்களைக் கிழித்துவிட்டு கட்டிப்பிடித்த தம்பதி; வைரல் படத்தின் பின்னணி என்ன?

டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி பல ஆண்டுகளாக விவாகரத்து கோரி கோர்ட்டிற்கு அலைந்து கொண்டிருந்தனர். ஷிகா என்ற அப்பெண் செளரப் என்பவரை 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களில் க... மேலும் பார்க்க

பீகார்: 17 வயது சிறுவனை திருமணம் செய்த 22 வயது பெண்; பஞ்சாயத்திற்கு வந்த விவகாரம்; என்ன நடந்தது?

பீகார் மாநிலம் மதுபுரா மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் வசிப்பவர் பூஜாகுமாரி(22). இவருக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் பித்து குமார்(17) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் வீட்டிற்க... மேலும் பார்க்க

செயற்கை கருத்தரிப்பு மைய குளறுபடியால் மாறிய கரு? "பிறந்தது எங்கள் குழந்தைகள் அல்ல" - தம்பதி புகார்

டெல்லி அருகில் உள்ள குருகிராமைச் சேர்ந்த தம்பதியான ராகுல் மற்றும் மீனு தம்பதி செயற்கை முறையில் (Vitro Fertilisation) குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக டெல்லியில் உள்ள டாக்டர் கைலாஷ் கருத்... மேலும் பார்க்க

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க