செய்திகள் :

பார்வதி! - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

சொல்லுங்க மா..” 

வந்துட்டு இருக்கேன்... 

இப்பதான் வடசேரி... 

சரி பார்த்து வா... 

ம்ம் என்ற கனத்த குரலோடு பேருந்து ஜன்னல் துணியை நீக்கி பார்த்தேன்...பேருந்து ஒழுகினசேரி தாண்டி வடசேரி ஊருக்குள் நுழைந்துகொண்டு இருந்தது. செல்போனை பார்க்கட்டில் திணித்து கிளம்பத் தயாரானேன்... 

நடத்துனர் அறை கதவை திறந்து “வடசேரி எல்லாம் எழுந்து வாங்க என கட்டளையிட்டார்” தூக்கம் தெளிந்த குரலாகவே இருந்தது அவரது குரல்.தனியார் தொலைதூர பேருந்தில் ஏது நடத்துனர் எல்லாரும் ஓட்டுநர்கள் தானே? 

நீக்கி இருந்த திரையை மீண்டும் பார்த்தேன் வடசேரி பேருந்து நிலையம் தலையைக் காட்டியது. 

எழுந்து செல்ல தயாரானேன். அங்கங்கே சத்தம் கேட்டுக் கொண்டே தான் இருந்தது.இரண்டு மூன்று செல்போன்களின் அலாரம் சத்தமும் அடிக்கடி சில முணுமுணுப்புகள் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தது..சிலர் இன்னும் செல்ல வேண்டும் போல அவர்கள் அப்படியே இருந்தார்கள்.ஒருவருக்குப் பின் ஒருவராக இறங்கத் தயாரானோம் எல்லோர் மனதிலும் ஒருவித மகிழ்ச்சியும் மறைந்து இருந்து எட்டிப் பார்த்தது தூக்கக் கலக்கத்தில் யாருமே சரியாக பேசவில்லை எல்லோருடைய குரலும் மிகவும் அமைதியாகவும் தேய்ந்து போன குரலாகவே இருந்தது. பேருந்து நின்று ஓட்டுனர் அறைக்கதவை திறந்தார். 

அண்ணா இதுதான் நாகர்கோவிலா?... 

ஆமா இது தான் உங்களுக்கு எங்க போனும்.. 

எனக்கு இடலாகுடி போனும்.... 

இங்கதான் பஸ் ஸ்டாண்ட்... தெக்கால நடந்து போனிங்கன்னா கன்னியாகுமரி பஸ் நிக்கும் அதுல ஏறிப்போங்க... 

என்று யாரோ பேசிக் கொண்டது காதில் விழுந்தது என் மனதிற்கு சிறிய புன்னகை என்ன செய்ய முடியும் பல காலங்கள் அந்த ஊரில் தானே நான் பள்ளியில் படித்தேன். 

பின்னாலிருந்து ஒரு பையன் காலைத் தட்டியவுடன் பின்னால் திரும்பி பார்த்தேன் ஒருவர் செய்கை மொழியில் சாரி என்று சொன்னார் நானும் அவருக்கு பதிலாக தலையைச் சேர்த்து திரும்பி விட்டேன். அந்த பேருந்து மார்த்தாண்டம் வழி செல்ல இருப்பதால் வடசேரி பேருந்து நிலையத்தில் வாசலிலே இறக்கிவிட்டு அதன் பயணத்தை தொடங்கியது. இடலாக்குடிக்கு வழி கேட்டவர் மற்றொரு முறை அவர்களைப் பார்த்து பேருந்து நிற்கும் இடத்தை உறுதி செய்து கொண்டார்.

பேருந்து நிலையம் வாசலை தாண்டி உள்ளே நடக்க ஆரம்பித்தேன். ஒருமுறை பாக்கெட்டை தொட்டு செல்போன் இருப்பதையும் பின்பக்கத்தில் பர்ஸ் இருப்பதையும் உறுதி செய்து கொண்டேன். மணி ஏழு மணி கடந்து ஓடிக் கொண்டிருந்தது.இன்று சனிக்கிழமை என்பதால் அங்கங்கே பள்ளி சீருடையில் சில மாணவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள்.இன்னொரு பேருந்து பிடித்து தான் ஊருக்கு செல்ல வேண்டும்.

பேசாமல் ஒரு டீ குடித்து செல்வோம் என தோன்றியது டீக்கடை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் சில ஊர்கள் பெயர்களை நடத்துனர் கத்திக் கொண்டிருந்தார்.ஆங்காங்கே ஹாரன் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பேருந்து நடுப்பகுதியில் கட்டண கழிப்பிடம் ஒன்று பார்த்ததும் எனது வயிறு சற்று கலங்க ஆரம்பித்தது அதை நோக்கி என் கால்கள் நடக்க ஆரம்பித்தது கட்டிடத்தின் வாயிலில் 65 வயதுமிக்க ஒரு கிழவர் உட்கார்ந்து இருந்தார் அவர் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

முகங்கள் தோய்ந்து தூக்கத்தில் இன்னும் வெளிப்படாதவாறு கன்னத்தில் கை வைத்தவாறு எதையோ ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்தார்.அவர் பார்வைக்கு என்ன தெரிகிறது என்று தெரியவில்லை அவர் உதடுகள் மட்டும் ஆங்காங்கே நகர்ந்து கொண்டிருந்தது.சிலர் பேசாமலேயே மேசையின் மேல் ஐந்து ரூபாய் வைத்துக்கொண்டு சென்றார்கள் சிலர் பத்து ரூபாய் வைத்து ஐந்து ரூபாய் தானாக எடுத்துக் கொண்டு சென்றார்கள்.

ஆட்கள் வரும் போது மட்டும் அந்த கிழவர் மேசை மீது ஒரு கண் வைத்துக் கொள்வார் அவ்வளவு நம்பிக்கையா என்று சற்று ஆச்சரியமாக தான் இருந்தது நானும் அதே பாணியில் 10 ரூபாய் நோட்டை வைத்துவிட்டு ரூ.5 எடுத்துக் கொள்ளும் பொழுது தாத்தா சிறிதாக தலையசைத்துக் கொண்டார் பொது கழிப்பிடம் தானே அதே போல தான் இருக்கும் என்பதுதான் உலக நீதி எல்லோருக்கும் பொறுப்புகள் இருக்கிறது அந்த பொறுப்புகள் இடத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள் பொறுப்புகள் சமநிலையில் இருந்தால் போதும் எல்லாரும் சமமாகிவிடுவார்கள் எல்லா கழிப்பறையும் சுத்தமாகிவிடும் இது கழிப்பறை விஷயத்தில் மட்டுமல்ல கல்வி கலாச்சாரம் என எல்லா விஷயத்திலும் பொருந்த தான் செய்கிறது.காலை கடனை அடைத்துவிட்ட பிறகு வெளியே வந்தேன் டீக்கடைக்கு அடி எடுத்தேன். எப்போதும் ஊரிலிருந்து வரும்பொழுது ஒரே டீக்கடை தான் பேருந்து நிலையத்திலிருந்து சந்தைக்கு நுழையும் பாதையில் முதல் கடை தான் அந்த கடை.

என் ஊர் பேருந்து என்னை வட்டமடித்துச் சென்றது.அருமனை பேருந்து தான் இதில் ஏறிக் கொண்டால் ஐந்து ரூபாய் மிச்சமாகும். இருந்தாலும் பரவாயில்லை எங்கள் ஓர் வழியாக அதிக தூரம் செல்லும் பேருந்து இதுதான் அதனால் குறைந்தபட்ச விலை தான் மற்ற பேருந்து விட 5 இதில் குறைவு. 

அண்ணே ஒரு டீ.... 

தம்பி ஒரு டீ போடு.. என அவர் மாஸ்டரிடம் கூறினார்.. 

மக்கலே வடை எடுத்துக்க... 

இல்ல பல் தேக்கலைன்னா.. 

சிறிதான சிரிப்புடன் எனக்கு மட்டும் புரிந்தது பல் தேய்க்கவில்லை என்றால் டீ மட்டும் குடிக்கலாமா? என அவர் மனதிற்குள் நினைத்தார் போல.. 

சரி தம்பி வீட்டுக்கு எதாவது வாங்கிட்டு போ.. என்று சொன்னதும் கடையை முன் அடுக்கி வைக்கப்பட்ட பலகாரங்களைப் பார்த்தேன். உளுந்து வடை பருப்பு வடை பழ பஜ்ஜி என எல்லாம் மலைபோல் குவித்து வைத்து இருந்தார்கள். சில ஈக்கள் மேலே காதல் நடத்திக் கொண்டிருந்தது.அந்த காதலர்களை பிரித்து விடுவதற்காகவே கையில் ஒரு துண்டு வைத்து துணி வைத்து விரட்டிக்கொண்டே இருக்கிறார்.. 

மக்கா டீ எடுத்துக்க. 

அவர் கையில் காகிதத்தை எடுத்துக்கொண்டு சொல்லு மக்கா? எல்லாத்துலயும் ரெண்டுன்னு வைக்கட்டுமா? அவர் அவரது வியாபார யுக்தியை பயன்படுத்திக் கொண்டார். எனக்குத் தெரிந்து நிச்சயம் அவர் கடை முதலாளியாக இருக்க மாட்டார்... இல்லனா பழ பஜ்ஜி மட்டும் அஞ்சு வையுங்க என டீ யை ரசிக்க ஆரம்பித்தேன்.பொதுவாக சென்னை போன்ற மாநகரங்களில் பழ பஜ்ஜி கிடைப்பதில்லை .எங்கள் ஊரில் சில கடைகளில் தான் அவல் வைத்து மிகவும் பெரிதாக சுவையாக இருக்கும்.அப்போது தான் ஞாபகம் வந்தது சென்ற முறை இதையே வீட்டுக்கு வாங்க கொண்டு செல்லும் பொழுது தங்கை நன்றாகவே இல்லை என்றாள் இப்போதும் அதை தான் வாங்கிக் கொண்டு செல்கிறேன் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.. 

டீ குடித்து கொண்டிருக்கும் பொழுது சுமார் ஐந்து கடைகளுக்கு முன்னால் ஒரு நபர் அழுக்கு துணிகளோடு அரைகுறை ஆடைகளோடு கட்டிய வேட்டியும் ஒருபுறம் அவிழ்ந்திருக்க வேட்டியின் கலர் வெள்ளை என்று நினைக்கிறேன் அது காவி கலராக மாறும் வரை அழுக்காக இருந்தது. ஒவ்வொரு கடைகளுக்கு முன்னால் இருக்கும் வாடிக்கையாளர்களிடம் கையேந்தி கொண்டிருந்தார். ஒவ்வொருவருக்கும் சுமார் 5 லிருந்து 8 வினாடிகள் காத்துக் கொண்டிருப்பார் எந்த பதிலும் வரவில்லை என்றால் அடுத்த நபர் என்றவரே போய்க் கொண்டிருந்தார்.

சில பேர் கொடுக்கிறார்கள் சிலர் அவரைக் கண்டு கொள்ளவே இல்லை அவர் கையில் இருந்த சில்லறை காசை ஒலி எழுப்பி தான் நான் உங்களிடம் பிச்சை கேட்கிறேன் என நமக்கு தெரியப்படுத்துகிறார். காலை வெயிலில் சூரியனுக்கு பிறகு மின்னியது அவர் கையில் இருந்த சில்லறைகள் தான்.என் அருகில் வர இன்னும் ஒரு சில அடிகள் தான் இருந்தது.நான் கடைசி மடக்கு டீயை லவக் கண்டு குடித்துவிட்டு வேகமாக டீக்கடையில் இருந்து கிளம்ப வேண்டியது தான். 

எவ்வளவு ஆச்சு 65 ரூபாய் சரி சில்லறையை தேடிக் கொடுத்துவிட்டு நடக்க தயாராக இருந்தேன். என் அருகில் நெருங்கி விட்டார் அடுத்த பிச்சை என்னிடம் தான் கேட்கப் போகிறார் என எதிர் பார்த்து கொண்டேன்.இருந்தாலும் நான் கண்டுகொள்ளாமல் அவரை கடந்து நடக்க ஆரம்பித்தேன் அவர் மற்றொருவரை தேடி அவரது பணியை தொடங்கி கொண்டு இருந்தார். ஒரு வழியாக அவரை கடந்து விட்டோம் என பெருமூச்சு மட்டும் தான் விடவில்லை அவரை கடந்து செல்லும் பொழுது அவர் இடது கையில் பார்வதி என பச்சை குத்தி இருப்பது என் கண்ணில் பட்டது ஒரு சிறிய புன்னகையோடு மனதில் தோன்றியது. 

காதல் என்னவெல்லாம் செய்கிறது 

பார்வதி என்பது 

அவன் 

அம்மாவாக! 

காதலியாக! 

மனைவியாக! 

மகளாக இருக்கலாம் ஆனாலும் அவர்கள் எல்லாம் ஒரு பெண் தானே... யாரோ சொன்னது தான் ஞாபகம் வந்தது. எந்த பெண்ணும் தனது ஆணின் பெயரை கையில் பட்சை குத்திக் கொள்வதில்லை ஆனால் அவளது காதல் வேறு வழி.ஆனால் ஆணுடைய காதல் எப்படி வெளியே சொல்வது என தெரியாமல் வாழ்நாள் முழுவதும் சுமப்பதற்காகவே கையில் அந்த பெயரை குத்தியுள்ளார்... 

எனது பேருந்து வந்ததும் ஏறி பின் கண்ணாடி வழியாக அவரைத் தேடினேன் ஆனால் அவர் கண்ணுக்கு படவே இல்லை எப்படியும் அவர் பணி தொடர தான் செய்யும் அப்போதுதான் தோன்றியது குறைந்தது இரண்டு ரூபாயாவது கொடுத்திருக்கலாம்... 

-ரசூல் முகைதீன் 

கன்னியாகுமரி மாவட்டம் 

தேர்தல்

தீயால் விழித்த காடு! - குறுங்கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

16 சதவீத அன்பும்... 100 சதவீத விடுதலையும்: ஒரு பெண்ணின் பயணம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சமத்துவத்தின் குரல்: அமெரிக்கப் போராட்டமும், தோழர் கிளாரா ஜெட்கினின் தீர்மானமும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பாரசீகம் ஈரானாக மாறிய கதை: ஒரு கலாச்சார மாற்றத்தின் வரலாறு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பஞ்சு மில்லைப் பாத்தீங்களா?-ஆத்தாவின் தேடல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

யாருக்கெல்லாம் வாக்களிக்க மாட்டேன்? - என் பார்வையில் தேர்தல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க