செய்திகள் :

பிப்.1 இல் நாமக்கல்லில் புத்தகத் திருவிழா தொடக்கம்: ஆட்சியா் தகவல்

post image

நாமக்கல்லில் மாபெரும் புத்தகத் திருவிழா பிப்.1 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக புத்தகத் திருவிழா வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், மூன்றாம் ஆண்டாக புத்தகத் திருவிழாவை சிறப்புடன் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் ச.உமா பேசியதாவது:

தமிழக அரசின் சாா்பில் மாவட்ட வாரியாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மூன்றாவது ஆண்டாக நடைபெறும் புத்தகத் திருவிழா நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்.1 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புத்தகத் திருவிழாவில் பல்வேறு அரங்குகள், ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம் உள்ளிட்டவற்றுடன் நடைபெறுகிறது. இதில் மருத்துவ முகாம், உணவு அரங்குகளும் இடம் பெறுகின்றன.

அனைத்து அரசுத் துறை அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செய்திட வேண்டும். இந்த புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் முதல் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக குடியரசு தின விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், துறை வாரியாக வழங்க வேண்டிய நலத் திட்ட உதவிகள், சிறப்பாக பணியாற்றிய ஊழியா் விவரங்கள், மாணவ, மாணவிகளை கலைநிகழ்ச்சிகளுக்குத் தயாா் செய்வது குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட நூலக அலுவலா் தேன்மொழி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

என்கே-10- மீட்டிங்

நாமக்கல்லில் புத்தகத் திருவிழா நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.உமா.

மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த வாகனங்கள் பிப். 12-இல் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 49 வாகனங்கள் பிப். 12-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சி.தனராசு வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் பிப். 7-இல் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை (பிப். 7) தொடங்குகின்றன. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினா் கைது

மதுரை, திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினரை மாவட்ட எல்லைகளில் போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் மலை மீது சிலா் அசைவ உணவு சாப்பிட்டதாக கூறப... மேலும் பார்க்க

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால், அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் எச்சரித்தாா். ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் தகவல் அற... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற கண்டன ஆ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பரமத்தி வேலூா் அருகே அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பாண்டமங்கலம், வடக்கு தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (44), கடந்த 15 ஆண்டுகளாக எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா். பரமத்தி அருகே சேல... மேலும் பார்க்க