செய்திகள் :

`பிராமணர் என்கிற காரணத்திற்காக அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?' - அமைச்சர் ரமேஷ் விளக்கம்

post image

தமிழக அமைச்சரவையில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ரமேஷ் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்நிலையில், `பிராமணர் என்கிற காரணத்திற்காக அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரமேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

அதற்கு பதிலளித்த அவர், " சாதிக்கு எதிராக போராடிய பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றவன் நான். சாதி பார்த்து யாருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

மதச்சார்பின்மை தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை. எங்களுக்கு மதமோ, சாதியோ, இனமோ, பணமோ, மொழியோ, பாலினமோ எந்தவித பாகுபாடும் கிடையாது என்பதை உறுதியாக ஏற்றுக்கொண்டு தான் தவெகவில் சேர்ந்திருக்கிறோம்.

அதனால் எதைப் பார்த்தும் தலைவர் விஜய் வாய்ப்பு கொடுக்கவில்லை. சேவை செய்யக்கூடிய மனநிலை இருக்கிறதா? என்பதை பார்த்து தான் வாய்ப்பு வழங்கினார். சாதியை வைத்து பேச வேண்டிய அவசியம் இல்லை.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய எண்ணம் இருப்பதை மட்டும் பாருங்கள். மக்கள் ரமேஷ் என்ற எம்.எல்.ஏ-வுக்காக வாக்களிக்கவில்லை. அனைவரும் எங்கள் தலைவர் விஜய்க்காக தான் வாக்களித்தார்கள். திரையில் அவர் வரும்போது யாரும் சாதி, மதம் அடிப்படையில் பார்க்கவில்லை.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

அவர்களை தங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்த்தார்கள். விஜய் நிறுத்திய வேட்பாளர்களையும், அமைச்சர்களையும் அப்படித்தான் மக்கள் பார்க்கிறார்கள். அவருக்கு இதுபோன்று பிரிவினை பார்க்கக்கூடிய எண்ணம் துளியும் கிடையாது" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

'இந்திய அரசு அனுமதித்த அளவுக்குள்ளேயே தமிழக அரசின் கடன் இருக்கிறது'- நிதித்துறைச் செயலர் சித்திக்

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

'ரூ10 லட்சம் கோடி கடன்; திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு'- வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ... மேலும் பார்க்க

”அமைச்சர் ஷாஜஹான் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு”- சாடும் ஜவாஹிருல்லா!

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தனது தொகுதிக்கு உட்ப... மேலும் பார்க்க

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; தவெகவில் இணைகிறாரா?

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் விஜயபாஸ்கர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அண... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் ராஜினாமா : அதிமுக MLAக்கள் எண்ணிக்கை 42 ஆகக் குறைவு; 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது.234 உறுப்பினர்களைக் ... மேலும் பார்க்க

ஆப்சென்ட் திமுக; ஒரே ஒரு அதிமுக எம்.எல்.ஏ வருகை!- எம்.எல்.ஏ பயிற்சி கூட்டத்துக்கு வந்த கட்சிகள் எவை?

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி கூட்டத்தை தி... மேலும் பார்க்க