செய்திகள் :

பிரிட்டன் டு கொல்லம்; மனைவியின் அந்தரங்க வீடியோவை ஆபாச தளத்தில் பதிவிட்ட நபர் - கைதுசெய்த போலீஸ்!

post image

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டியம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரிட்டனில் வேலை செய்துவந்தார். அவர் மனைவி மற்றும் 4 வயது மகளுடன் பிரிட்டனில் வசித்துவந்தார். இதற்கிடையே ஊருக்கு குடும்பத்துடன் வந்த அவர் மீது அவரது மனைவி கொட்டியம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.​ பிரிட்டனில் வசித்து வந்த காலகட்டத்தில் தனது அந்தரங்கக் காட்சிகளைப் படம் பிடித்து ஆபாச இணையதளங்களில் பதிவேற்றியதாக அந்த புகாரில் அவரது மனைவி தெரிவித்திருந்தார். அதுமட்டும் அல்லாது அவர் சொந்த ஊருக்குத் திரும்பிய பிறகும் மனைவியுடன் தனியாக இருக்கும் வீடியோவை பதிவுசெய்ய முயன்றுள்ளார். 2026 ஜூன் 2 அன்று காப்பில் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, மனைவியிடம் நெருக்கமாக இருப்பதை ரகசியமாக வீடியோ எடுக்க முயன்றுள்ளார். இதுகுறித்து கேட்டபோது மனைவியை அவர் தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், தம்பதியரின் 4 வயது மகளின் முன்பாக அவர் முறையற்ற வகையில் நடந்துகொண்டதும் அம்பலமானது.

கொல்லம் மாநகர போலீஸ் ஆணையர் ஹேமலதா

இதனையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கொட்டியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் அந்த இளைஞர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்தனர். வழக்குகள் பதியப்பட்டதைத் தொடர்ந்து அந்த இளைஞர் தலைமறைவானார். கொல்லம் மாநகர காவல் ஆணையர் ஹேமலதா உத்தரவின்பேரில், போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர்.

ஆபாச வீடியோ எடுத்த கணவன்

இது குறித்து கொல்லம் மாநகர காவல் ஆணையர் ஹேமலதா ஐ.பி.எஸ் கூறுகையில், "பெண்கள் மற்றும் சிறாருக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கைது செய்யப்பட்ட இளைஞரின் செல்போனில் உள்ள டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்து, காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். டிஜிட்டல் தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர வேண்டும்" என்றார்.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க