செய்திகள் :

``உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் ஏன் நிறைவேற்றவில்லை எனக் கேட்க முடியாது" - விசிக திருமாவளவன்

post image

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் மற்றும் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்திருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கர்நாடகா சென்றிருந்த விசிக தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு ஏகனாபுரம் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அன்றைய முதலமைச்சரை நேரடியாகச் சந்தித்து இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விசிக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பரந்தூர் விமான நிலையம் அமையவிருந்த இடம்...

அப்போது, பெரும்பாலான நில உரிமையாளர்கள் இழப்பீட்டுத் தொகையைப் பெறத் தொடங்கிவிட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. எனினும், ஏகனாபுரம் பகுதி மக்கள் தங்கள் விளைநிலங்களைத் தவிர்த்து, அருகில் உள்ள அரசுக்குச் சொந்தமான காலியிடங்களைப் பயன்படுத்துமாறு முன்வைத்த மாற்று யோசனையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

தற்போது பரந்தூர் திட்டத்தை முழுமையாகக் கைவிட்டு, புதிய விமான நிலையத்திற்கான வேறு இடத்தை தேர்வு செய்வோம் என்ற உறுதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், புதிய இடத்தை தேர்வு செய்யும்போது சட்டப்படி அங்குள்ள மக்களின் கருத்தறிந்து அவர்களின் இசைவைப் பெற வேண்டியது மிக முக்கியமாகும். விமான நிலையம், துறைமுகம், ரயில்வே போன்ற எந்தவொரு பெருந்திட்டத்தைக் கொண்டு வந்தாலும், நிலங்களைக் கையகப்படுத்தும் போது நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்படாதவாறு திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே விசிகவின் நிலைப்பாடாகும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

புதிய அரசு பொறுப்பேற்று 100 நாள்களே ஆகியுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. எந்தவொரு புதிய அரசும் தனது திட்டங்களையும் வாக்குறுதிகளையும் முழுமையாகச் செயல்படுத்தக் குறைந்தபட்ச காலமாவது தேவைப்படும் என்பதால், உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் ஏன் நிறைவேற்றவில்லை என்று விவாதிக்க முடியாது. ஆளுங்கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, அது தொடர்பாக, பொதுவெளியில் விமர்சிப்பதை விட அரசின் கவனத்திற்கு உரிய முறையில் கோரிக்கைகளைக் கொண்டு சென்று, வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தும் கடமையை தொடர்ந்து செய்து வருகிறது." என்றார்.

'அதானிக்காக பரந்தூரை காலி செய்ய வேண்டாமென ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம்... ஆனால்!'- அமைச்சர் வன்னிஅரசு

நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் '110' விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் பரந்தூரை சேர்ந்த விவசாயிகள் இன்று முதல்வர் விஜய்யை சந்தித்து... மேலும் பார்க்க

வர்த்தக விரிசலில் அமெரிக்கா, கனடா: இதில் யாருக்கு என்ன பிரச்னை? இது சரியாக வாய்ப்புகள் உண்டா?

"கனடா ஒரு மாநிலமாக இல்லாதபோதிலும், ஒரு அமெரிக்க மாநிலத்திற்கான அனைத்துப் பலன்களையும் பெற விரும்புகிறது!!! அதுமட்டுமன்றி நமது சிறந்த விவசாயிகளின் மீது பல ஆண்டுகளாக அநியாயமான முறையில் அதிகளவிலான வரிகளை ... மேலும் பார்க்க

அமைச்சர் மன்னிப்பு: ``இனி இதுபோல நடக்கக் கூடாது" - மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காத்திருப்போர் கூடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.26 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. அந்தக் கட்டிடத்தின் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இந்த... மேலும் பார்க்க

புதுச்சேரி: ``எனக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது!” - சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் பகீர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று காலை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அரியாங்குப்பம் தொகுதியின் என்.ஆர்.கா... மேலும் பார்க்க

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: ``நிரூபணமான போலி எண்கவுண்டர்; CBI விசாரணை தேவை" - நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையேயும் அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் த... மேலும் பார்க்க

Tvk: அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்; ஆனால் அனைவருக்கும் விலையில்லா சிலிண்டர் இல்லை!

நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த முக்கியத் திட்டங்கள் – வெற்றிப் பயணத் திட்டம் மற்றும் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் சிலிண்டர்கள் திட்டம். இந... மேலும் பார்க்க