செய்திகள் :

பி.எஃப்: இனி 90% பணத்தை 55 வயதுக்குள் திரும்ப எடுக்கலாம்! மாறிய புதிய விதிமுறைகள் சாதகமா, பாதகமா?

post image

பணியாளர் ஓய்வுக் கால விதிமுறைகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது எம்ப்ளாயிஸ் பென்ஷன் ஃபண்ட் நிறுவனம். ஒரு பணியாளர் 55 வயதில் தனது பி.எஃப் கணக்கில் இருக்கும் 90% பணத்தைத் திரும்ப எடுக்கலாம் என்கிற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், ஒரு பணியாளர் இரண்டு மாதங்களாக வேலை இல்லாத பட்சத்தில், அவருடைய பி.எஃப் கணக்கிலிருந்தும் பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்றும் புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

பி.எஃப்

பி.எஃப் எனும் கட்டாயச் சேமிப்பு!

பொதுவாக, ஒரு பணியாளர் 58 - 60 வயதாகி ஓய்வு பெற்றபிறகு அந்த ஓய்வுக் காலத்தில் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பென்ஷன் ஃபண்ட் என்பது உருவாக்கப்பட்டது. இதன்படி ஒரு பணியாளர் எந்த நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் அவருடைய மாதச் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை ஓய்வுக் காலத்தில் பயன்படுத்தும்படியான சேமிப்பாகக் கட்டித்தான் ஆகவேண்டும். எல்லா நிறுவனங்களும் இந்த பி.எஃப் பிடித்தத்தைக் கட்டாயம் செய்தாக வேண்டும்.

இப்படிச் சேர்க்கும் பணத்துக்கு ஆண்டுதோறும் 8.2% வட்டி கிடைக்கும் என்பதுடன், ஓய்வுக் காலத்தில் மொத்தப் பணத்தையும் திரும்ப எடுக்கும்போது வரி எதுவும் கட்டத் தேவை இல்லை. பாதுகாப்பான சேமிப்பு, ஓரளவு வட்டி, வரி இல்லை ஆகிய பல பாசிட்டிவ்-ஆன விஷயங்களால் பலரும் இந்த சேமிப்பை மிகவும் விரும்பினார்கள். இந்த பி.எஃப் திட்டத்தில் ஒருவரின் சம்பளத்தில் பெரும்பகுதியை 'வாலண்டரி பென்ஷன் ஃபண்ட்' மூலம் கூடுதலாகவும் சேர்க்கலாம் என்பதால், பலரும் இதில் அதிகமான பணத்தை சேர்த்து வருகின்றனர்.

பி.எஃப்

அரசின் சவால்!

பல லட்சம் பணியாளர்கள் பென்ஷன் ஃபண்டில் இப்படிப் பணத்தை சேர்த்து வருவதால், பல லட்சம் கோடி ரூபாய் இந்தக் கணக்கில் சேர்ந்துள்ளது. இவ்வளவு பணத்துக்கும் ஆண்டுதோறும் 8.2% வட்டி தருவது மத்திய அரசுக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. இதனால் பி.எஃப் தொடர்பான விதிமுறைகளைத் தளர்த்தி, பணியாளர்கள் சில கண்டிஷன்களுக்கு உட்பட்டிருந்தால், பி.எஃப் பணத்தில் இருந்து எளிதாகப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்கிற நிலையை உருவாக்கி இருக்கிறது.

பி.எஃப்

மாறிய விதிமுறைகள்!

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள❤️ புதிய விதிகளின்படி, ஒருவர் 55 வயதானபின் தனது பி.எஃப் சேமிப்பில் இருந்து 90% பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். முன்பு 75% அளவுக்கு மட்டுமே திரும்ப எடுக்க முடியும் என்கிற நிலை இருந்தது.

அது மட்டுமல்ல, ஒருவர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலை இல்லாமல் இருக்கும் நிலையில், பி.எஃப் சேமிப்பில் இருந்து 90% பணத்தைத் திரும்ப எடுக்க முடியும். முன்பு இந்தக் காத்திருப்புக் காலம் 12 மாதங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவச் சிகிச்சைக்கான செலவு, கல்விக் கட்டணச் செலவு, திருமணத்துக்கான செலவு, வீடு, அடுக்குமாடி வீடு, மனை வாங்குவதற்கான செலவு ஆகிய காரணங்களுக்காக பி.எஃப் சேமிப்பில் இருந்து பணத்தைத் திரும்ப எடுக்க முடியும். இ.பி.எஃப்.ஒ போர்ட்டல் மூலம் பி.எஃப் சேமிப்பில் இருக்கும் பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளப் பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்!

பி.எஃப் வட்டிப் பணம்

சாதகமா, பாதகமா?

பி.எஃப் தொடர்பான விதிமுறைகள் சில தளர்த்தப்பட்டு இருப்பது, பணியாளர்களுக்கான சாதகமான விஷயம் என்றே சொல்லலாம். பி.எஃப் கணக்கில் குறிப்பிட்ட அளவு பணம் சேர்த்து வைத்திருக்கும்போது, அந்தப் பணத்தை எடுத்து பயன்படுத்த முடியாமல், அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் அவல நிலையை இந்த விதிமுறை மாற்றம் தடுக்கிறது.

அதே நேரத்தில், வேறு சில காரணங்களால் இந்த விதிமுறை மாற்றங்கள் பணியாளர்களுக்குப் பாதகமாகவும் அமையும். ஓய்வுக் காலத்துக்கென சேமித்து வைத்த பணத்தை முன்கூட்டியே எடுத்துவிடுவதால், ஓய்வுக் காலத்திற்குத் தேவையான பணம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். அப்போது திடீர் செலவு வந்தால், வருமானம் இல்லாத காலத்தில் அதிக வட்டிக்குக் கடன் வாங்கித் திரும்பக் கட்ட வேண்டிய அவஸ்தைக்கு உள்ளாவோம்!

மியூச்சுவல் ஃபண்ட்

பணியாளர்கள் என்ன செய்யலாம்?

ஓய்வுக் காலத்துக்கான பணத்தைச் சேர்க்க, முன்பு பி.எஃப் மட்டுமே ஒரே வாய்ப்பாக இருந்தது. ஆனால், தற்போது மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகள் எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கிறது. ஒருவர் வேலைக்குச் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே தன் ஓய்வுக் காலத்துக்காக மியூச்சுவல் ஃபண்ட் மூலம் பணம் சேர்க்கத் தொடங்கலாம்! 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என ஓய்வுக் காலத் தேவைக்காக மியூச்சுவல் ஃபண்ட் மூலம் ஒருவர் பணம் சேர்த்தால், அதிகமான பணத்தை சேர்க்க முடியும். பி.எஃப்-ல் சேர்க்கும் பணத்துக்கு அதிகபட்சம் 8.2% மட்டுமே வட்டி கிடைக்கும். ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் சேர்க்கப்படும் பணத்துக்கு நீண்ட காலத்தில் ஆண்டுதோறும் 10% - 12% வரை லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், 40 - 50 வயதுக்குக் கீழே இருப்பவர்கள் இனியும் பி.எஃப் சேமிப்பை மட்டும் நம்பி இருக்காமல், மியூச்சுவல் ஃபண்டிலும் நீண்ட கால அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்ப்பது அவசியத்திலும் அவசியம்!

லாபம்

மியூச்சுவல் ஃபண்டில் SIP மற்றும் Lump sum முதலீட்டை ஆரம்பிக்க....

மியூச்சுவல் ஃபண்டில் SIP மற்றும் Lump sum முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் லாபம் நிறுவனத்தின் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!

ஏ.ஆர்.குமார் - 89259 44568

சபரிநாதன் - 89259 44569

தங்கலட்சுமி - 95007 77894

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

Vikatan Wealth Pvt Ltd - ARN - 310095

பி

உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி... வருகிறது லாபம் 'மணி கிளினிக்'!

SIP தொடங்கிவிட்டீர்கள். மாதந்தோறும் பணமும் செலுத்துகிறீர்கள். ஆனால் சந்தை 10% சரிந்தால் என்ன செய்வது என்று தெரியுமா? கையில் ₹5 லட்சம் இருந்தால் மொத்தமாக முதலீடு செய்வதா, அல்லது SIP முறையில் முதலீடு செ... மேலும் பார்க்க

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கான பணத்தைச் சேர்க்க மிகச் சிறந்த வழி எது தெரியுமா?

நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவைப்படும் என்று நினைத்து நாம் பல வகையில் பணம் சேர்க்கிறோம். 'நாம் இருக்கிற வரை நமக்கு; நமக்குப்பின் நம் குழந்தைகளுக்கு...' என்று நினைத்து, வீடு வாங்குகிறோம். 'இப்... மேலும் பார்க்க

ஓய்வுக்காலத்திற்கு EPF மட்டும் போதுமா? இவற்றையும் மனசில் வெச்சு செயல்படுங்க!

மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினரின் மிகப்பெரிய நம்பிக்கையே ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் (EPF - Employee's Provident Fund) தொகைதான். "நமக்குத்தான் பி.எஃப் இருக்... மேலும் பார்க்க

A2B : ரூ.1,600 கோடி... கைமாறிய பெரும்பான்மையான பங்குகள்! - வாங்கியது யார் தெரியுமா?

போதி ட்ரீ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் A2B-இன் பெரும்பான்மையான பங்குகளை சுமார் 180 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,600 கோடி) வாங்குவதன் மூலம் அடையாறு ஆனந்த பவனின் உரிமையைத் தன்வசமாக்கி இர... மேலும் பார்க்க

இளம் தலைமுறையினருக்காக ‘யங் ஸ்டார் நியோ’ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தது ஸ்டார் ஹெல்த்!

ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NSE: STARHEALTH; BSE: 543412), இளம் தொழில் வல்லுநர்கள், திருமணமான தம்பதிகள் மற்றும் வளர்ந்து வரும் குடும்பங்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட ... மேலும் பார்க்க