செய்திகள் :

புகையிலை பொருள்களுக்கு மீண்டும் வருகிறது `கலால் வரி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

post image

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல், இந்தியாவில் 'GST 2.0' நடைமுறை கொண்டுவரப்பட்டது.

அதன் கீழ், அதுவரை 5%, 12%, 18%, 28% என நான்கு ஸ்லாப்களாக இருந்த வரி, 5% மற்றும் 18% ஸ்லாப்களாக குறைக்கப்பட்டது. எலெக்ட்ரானிக் பொருள்கள் முதல் வாகனங்கள் வரை பல பொருள்களின் விலை வெகுவாக குறைந்தது.

கூடவே, பான் மசாலா, புகையிலை, குட்கா, பீடி ஆகியவற்றிற்கு 40 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வரி இன்னமும் அமலுக்கு வரவில்லை. இது அமலாவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

கலால் வரி

இந்த நிலையில், புகையிலை மற்றும் புகையிலை சம்பந்தமான பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த செஸ் (Cess) வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக தற்போது 'கலால் வரி (Excise Duty)' கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கான மத்திய கலால் வரி திருத்த மசோதா நேற்று (நவம்பர் 3) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

கலால் வரி என்பது புதிய வரி நடைமுறை இல்லை. ஏற்கெனவே இருந்த ஒன்று தான். ஆனால், 2017-ம் ஆண்டு, ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின், இந்த வரி வசூல் நிறுத்தப்பட்டது, செஸ் வரி வசூலிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் கலால் வரியைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

நிர்மலா சீதாராமன் பேச்சு

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இது புதிய சட்டமோ, கூடுதல் வரியோ அல்ல. மத்திய அரசு எதையும் எடுத்தும் போய்விடவில்லை.

இது செஸ் அல்ல... இது கலால் வரி. இது ஜி.எஸ்.டிக்கு முன்பு நடைமுறையில் இருந்து வந்தது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தற்போது மத்திய அரசு செஸ் வரி வசூலிப்பதை நிறுத்தியுள்ளதால், மீண்டும் கலால் வரி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வசூலிக்கப்படும் வரியில் 41 சதவிகிதம் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும்" என்று பேசியுள்ளார்.

இனி 1000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,700 - 11,000 வரையிலும், தயாரிக்கப்படாத புகையிலைகளுக்கு 70 சதவிகிதமும், புகையிலைக் கலைவைகளுக்கு 325 சதவிகிதம் வரையிலும் கலால் வரி வசூலிக்கப்படும்.

செங்கோட்டையன், சின்னசாமி, அடுத்தடுத்து கட்சி மாறும் சீனியர்கள்; கொங்கு மண்டலத்தில் திணறும் அதிமுக?

சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் என்றாலே அரசியல் புள்ளிகளின் கரைவேட்டிகள் மாறுவது இயல்பு தான். அப்படி அடுத்தடுத்த கட்சி தாவல்களால் கொங்கு அரசியல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. அதிம... மேலும் பார்க்க

மூன்று `செக்’குகளும் பவுன்ஸ்; பிடிவாரண்ட் போட்ட நீதிமன்றம்! – அலறியடித்து ஆஜரான புதுச்சேரி அமைச்சர்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலை அமுதன். 60 வயதான இவருக்கும், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் அமைச்சரும், என்.... மேலும் பார்க்க

கே.டி.ராகவனுக்கு விரைவில் தேசியப் பதவி? டு செங்கோட்டையனுக்கு புது அசைன்மென்ட்! | கழுகார் அப்டேட்ஸ்

சர்ச்சையில் சத்தியமூர்த்தி பவன்!கிரிஷ் சோடங்கர் பெயரில் வசூல்...தமிழக காங்கிரஸில் புதிய மாவட்டத் தலைவர் நியமனங்களில்,வைட்டமின் ‘ப’ சகட்டுமேனிக்கு விளையாடுகிறதாம்.தமிழக காங்கிரஸ்,அமைப்புரீதியாக74மாவட்ட... மேலும் பார்க்க

புதின் : இன்று இந்தியா வருகிறார்; எதிர்பார்ப்புகள் என்ன?இந்தியாவின் கணக்கு என்ன? | Explained

இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின். இன்றும், நாளையும் அவர் இந்தியாவில் இருக்கப்போகிறார்.ரஷ்யாவில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த... மேலும் பார்க்க

``திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்'' - பாஜக தலைவர்கள் சொல்வது என்ன?

முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்... மேலும் பார்க்க

Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை' காரணமா?

இனி உற்பத்தியாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் 'சஞ்சார் சாத்தி' ஆப்பை ப்ரீ-இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் - இது சமீபத்தில் வெளியான மத்திய அரசின் உத்தரவு. ஏற்கெனவே உற்... மேலும் பார்க்க