அமெரிக்காவில் ஹமாஸ் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசா ரத்து!
புதிய பேருந்துச் சேவை: அமைச்சா் சா.சி. சிவசங்கா் தொடங்கி வைப்பு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், சின்னவெண்மணி கிராமத்துக்கு வழித்தடம் நீட்டிப்பு செய்து, செட்டிக்குளம் மற்றும் லப்பைகுடிகாடு பகுதிகளுக்கு 2 நகர புதிய பேருந்துகளும், அரியலூரிலிருந்து நாகல்குழி கிராமத்துகு புதிய பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் கொடியசைத்து வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகம் மற்றும் குன்னத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா். அமைச்சா் சா.சி. சிவசங்கா், சின்ன வெண்மணி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீா்வு காணும் வகையில், புதிய நகரப் பேருந்து வழித்தடத்தை நீட்டிப்பு செய்து அரியலூா் - திட்டக்குடி வரை செல்லும் வகையிலும், பெரம்பலூா் முதல் செட்டிக்குளம் வரையிலும், பெரம்பலூா் முதல் லப்பைகுடிகாடு வரையிலும், அரியலூா் முதல் நாகல்குழி கிராமம் வரையிலும் என 3 வழித்தடங்களுக்கும் புதிய பேருந்துச் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந் நிகழ்ச்சிகளில், கும்பகோணம் மண்டல போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநா் இரா. பொன்முடி, அட்மா தலைவா்கள் வீ. ஜெகதீசன், சி. ராஜேந்திரன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், திருச்சி மண்டலப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் முத்துகிருஷ்ணன், கோட்ட மேலாளா் புகழேந்திராஜ், வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அறிவழகன், வட்டாட்சியா்கள் சரவணன் (பெரம்பலூா்), கோவிந்தம்மாள் (குன்னம்) உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.