செய்திகள் :

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் யாருக்கு என்னென்ன துறைகள்?

post image

புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணியுடன் 2026 தேர்தலில் வெற்றிபெற்ற ரங்கசாமி, மே மாதம் 13-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார்.

அன்றைய தினம் அவருடன் இரண்டு அமைச்சர்களும், ஜூன் 17-ம் தேதி மூன்று அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆனால் அவர்களுக்கு இலாகாக்களை ஒதுக்காமல் அமைதியாக இருந்த முதல்வர் ரங்கசாமியை காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

அதையடுத்து கடந்த ஜூலை 20-ம் தேதி ஆளுநர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்த முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீட்டுப் பட்டியலை அளித்தார். வழக்கமாக ஆளுநரிடம் வழங்கப்படும் இலாகாப் பட்டியல் ஒரு மணி நேரத்தில் வெளியாகிவிடும்.

அமைச்சர்களுடன் அளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி
அமைச்சர்களுடன் அளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி

ஆனால் இந்த முறை அறிவிப்பு தாமதமாவதற்கு, ஆளுநர் கைலாஷ்நாதன்தான் காரணம் என்று குற்றம் சுமத்தினர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர். அதாவது, அமைச்சர் நமச்சிவாயத்திற்காக பா.ஜ.க கேட்கும் இலாகாக்களை முதல்வர் ரங்கசாமி கொடுக்காததால், ஆளுநர் இலாகா அறிவிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டின் பின்னணி.

அதை உறுதிப்படுத்தும் விதமாக, பா.ஜ.க அமைச்சர் நமச்சிவாயத்திற்கு உள்துறையை ஒதுக்கி ரங்கசாமி கொடுத்த பட்டியல், நேற்று இரவே அரசிதழில் வெளியானது. அதன்மூலம் முதல்வர் ரங்கசாமி முதல் அனைவருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

முதல்வர் ரங்கசாமிக்கு திட்டம் மற்றும் நிதித்துறை, பொது நிர்வாகம், சுகாதாரத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், வருவாய் மற்றும் கலால், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, வஃபு வாரியம், உள்ளாட்சி நிர்வாகம், போக்குவரத்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், கிராமம் மற்றும் நகரமைப்பு, தீயணைப்பு, செய்தி மற்றும் விளம்பரத்துறை போன்ற இலாகாக்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல, பா.ஜ.கவைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, உள்துறை, மின்சாரம், கல்வித்துறை, வனம் மற்றும் வனவிலங்குத்துறை போன்றவை ஒதுக்கப்பட்டிருக்கின்றன. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவுக்கு, பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை, மீன் வளம் மற்றும் மீனவர் நலம் போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

ரங்கசாமி, கைலாஷ்நாதன்
ரங்கசாமி, கைலாஷ்நாதன்

அதேபோல என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் ராஜவேலுக்கு, ஆதிதிராவிடர் நலம், கலை மற்றும் பண்பாடு, வீட்டு வசதி, தகவல் தொழில்நுட்பம், எழுதுபொருள், அரசு அச்சகம், பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்துக்கு, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் நலன் போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

காரைக்காலைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் ஜி.என்.எஸ் ராஜசேகரனுக்கு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்டத் துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க