செய்திகள் :

’பெண்களுக்கு தவெக கட்சிக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

post image

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை காரமடை தமிழக வெற்றிக் கழக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி என்பவர் த.வெ.க பெண் ஊராட்சி செயலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், மேலும் கொலை மிரட்டல் மற்றும் சாதி வன்கொடுமை செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள செய்தியானது அதிர்ச்சி அளிக்கிறது. சொந்தக் கட்சிக்குள்ளேயே பெண்களை இது போன்ற வக்கிர புத்தியுடன் அணுகும் நபர்களைக் கொண்ட த.வெ.க தமிழகப் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப் போகிறது?

பிரச்சார மேடைகளில் ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே என்று முதல்வர் விஜய் அவர்கள் பேசியதன் அர்த்தம் இப்போதுதான் தமிழக மக்களுக்கு தெரிய வந்திருக்கிறது. கடந்த கால தி.மு.க அரசு பெண்கள் பாதுகாப்பிலும் சட்டம் ஒழுங்கிலும் எப்படி திராணியற்ற அரசாக விளங்கியதோ அதையேதான் தற்போதைய த.வெ.க அரசும் ஒரு படி மேலே செய்து வருகிறது. தன்னை அண்ணா என அழைக்கும் உங்களின் சகோதரிகளாகிய தமிழ்நாட்டுப் பெண்களுக்கு உங்கள் சொந்த கட்சிக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை என்ற மோசமான நிலையில் தான் பெண்களின் பாதுகாப்பு இருக்கிறது. முதலமைச்சர் தனது கட்சிக்குள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் இது போன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

"கடந்த ஆட்சியைக் காட்டிலும் குறைந்த விலைக்கே சைக்கிள் கொள்முதல்" - அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இதனைத் தொடர்... மேலும் பார்க்க

"காணாமல்போன செஞ்சி சிறுமியைக் கண்டுபிடிக்கவில்லை; ஆனால் குழந்தைகளுக்கு 'கேக்'" - இபிஎஸ் விமர்சனம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் இன்று ( நவ.13) துவங்கி வைத்து மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த... மேலும் பார்க்க

தவெக 6 மாத ஆட்சி: `` முதலமைச்சர் தன் கடமையை உணர்ந்து செயல்படவில்லை..!" - சிபிஐ வீரபாண்டியன்

தவெக அரசின் இந்த 6 மாதகால ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம். அந்த வகையில் முதல் பகுதியில் நாராயணன் திருப்பதியிடமும், அடுத்து அதிமுக-வின் முன்ன... மேலும் பார்க்க

'மாணவர்கள் மீது பழிபோட்டு, கல்வியை முடக்காமல் உதவித்தொகையை Dummy முதல்வர் கொடுக்க வேண்டும்'- உதயநிதி

தமிழ்நாடு அரசின் சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் (Ph.D) பட்டம் பயில விரும்பும் மாணவர்களுக... மேலும் பார்க்க

``பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை: தவெக செயலாளர் மீது புகார்; என்ன நடவடிக்கை?" - வானதி சீனிவாசன்

கோவை காரமடை தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, தவெக பெண் ஊராட்சி செயலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், கொலை மிரட்டல் மற்றும் சாதி வன்கொடுமை செய்வதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித... மேலும் பார்க்க

'Confident ah இருங்க, வெற்றி நிச்சயம்னு குற்றவாளிகளுக்கு சொன்னீங்களா முதல்வரே?' - எடப்பாடி காட்டம்

"தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை மௌனம் கலைக்காதவர், தமிழ்நாடு இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இல்லாமல், கொள்ளையர்களின் கூடாரமாக மாறியிருப்பது குறித்தாவது தனது கள்ள மௌனத்தை கலைப்பார... மேலும் பார்க்க