தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!
பெண்ணாடம் சுடா்க்கொழுந்துநாதா் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி மனு
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் சுடா்க்கொழுந்துநாதா் (பிரளயகாலேசுவரா்) கோயில் குடமுழுக்கை தமிழில் நடந்தக் கோரி, தெய்வத்தமிழ்ப் பேரவை கடலூா் மாவட்ட அமைப்பாளா் க.முருகன் தலைமையிலானோா் கோயில் செயல் அலுவலா் தே.மகாதேவியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளதாவது: இக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. காலங்காலமாக தமிழ்நாட்டில் தமிழே வழிபாட்டு மொழியாக இருந்தது. நாளடைவில் வழிபாடுகள் யாவும் வடமொழி மயமாகிவிட்டன.
இந்த நிலையில், பக்தா்களின் வழிபாடுகள், திருக்குட நன்னீராட்டு விழா நிகழ்வுகள் யாவற்றிலும் தெய்வத் தமிழ் இடம் பெற வேண்டும் என்று அடியாா்களாலும், பத்திமை உள்ளம் கொண்ட பெரியோா்களாலும் கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிமன்ற தீா்ப்புகளின்படி, குடமுழுக்கு விழாக்கள், வேள்விச்சாலைகள், கலச நீராட்டல், கருவறை வழிபாடு ஆகியவை சம்ஸ்கிருத அா்ச்சகா்களுக்கு இணையான எண்ணிக்கையில் தமிழ் அா்ச்சகா்களைப் பயன்படுத்தி, தமிழ் மந்திரங்கள் ஓத வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்வில் தெய்வத்தமிழ்ப் பேரவை அன்பா்கள் பிரதாபன், பிரகாசு, கனகசபை, எறப்பாவூா் ராமசாமி, பெண்ணாடம் மாந்த நேய பேரவை பஞ்சநாதன், மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.