செய்திகள் :

பென்னாகரத்தில் சட்ட விரோத மதுக்கடை; அடித்து நொறுக்கிய பெண்கள்; ஓட்டம் பிடித்த உரிமையாளர்

post image

தங்கள் கிராமத்தில் இயங்கி வந்த சட்டவிரோத மது விற்பனைக்கடைகளை கிராமப் பெண்கள் ஒன்றுகூடி அடித்து உடைத்த சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது வியாபாரி தப்பித்து ஓட்டம்
மது வியாபாரி தப்பித்து ஓட்டம்

தமிழகத்தில் அரசு அனுமதியோடு அமைந்துள்ள மதுக்கடைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு, கடைகளை மூடச்சொல்லி பொதுமக்கள் போராடி வருவது ஒருபக்கமென்றால், இன்னொரு பக்கம், மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத கடைகள் தமிழக கிராமங்களில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்தான் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தில் இதுபோன்ற சட்டவிரோத மது விற்பனைக் கடைகள் 4 இயங்கி வந்தன. இதனால் பாதிக்கப்பட்ட இக்கிராம பெண்கள் நேற்று ஒன்றுகூடி மதுக்கடைகளை அடித்து நொறுக்கினர்.

உடைக்கப்பட்ட சட்டவிரோத மதுக்கடை
உடைக்கப்பட்ட சட்டவிரோத மதுக்கடை

மதுக்கடை நடத்தி வந்த கோவிந்தன் என்பவர் பெண்களிடம் மிரட்டல் விடுத்து வாக்குவாதம் செய்ய ஆத்திரமடைந்த பெண்கள் அவரை ஓட ஓட துரத்தி அடித்தனர். இந்தச் சம்பவம் பென்னாகரம் பகுதியில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது, "எங்கள் பகுதியில் பெரியவர் முதல் சிறுவர் வரை போதைப்பழக்கத்துக்கு ஆளாகி வருகிறார்கள். அதிலும் சட்டவிரோதமாக மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் விற்பனை செய்வதால் பல குடும்பங்கள் நாசமாகி வருகின்றன.

இந்த வழியாக பள்ளி, கல்லூரி, வேலைக்கு பெண்கள் செல்ல முடியவில்லை, அச்சமாக உள்ளது. அதனால் இந்தக் கடைகளை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உட்பட எல்லா அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சமீபத்தில் தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்தவர்களிடம் முறையிட்டும், அவர்களும் உதவவில்லை, அதோடுதான் நாங்களே கடைகளை அப்புறப்படுத்த கிளம்பி விட்டோம்" என்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது.

சென்னை: தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை - வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

சென்னை, தி.நகர் காவல் மாவட்டத்தில் உள்ள வீட்டில் 27 வயதுடைய பெண் ஒருவர் அவரின் அக்காவுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 25.04.2026-ம் தேதி இரவு, அ... மேலும் பார்க்க

பாவூர்சத்திரம்: போதையில் இளைஞர் அடித்து கொலை; `101'க்கு கால் செய்து நாடகம்- நண்பர் சிக்கியது எப்படி?

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூத்து, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரவீன் (வயது 26), இவரும் அதே ஊரில் வடக்குத் தெரு லிவிங்ஸ்டன் மகன் முகிலன் (எ) வசந்த் (20) இருவரும் சிறு... மேலும் பார்க்க

திருச்சி: பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு ஒரு கிலோ நகை கொள்ளை! - 5 பேரை தேடும் போலீஸ்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த உதய் (வயது: 36) என்பவர் திருச்சியில் நகை மதிப்பிடும் பணியைச் செய்து வருகிறார். அவர், குடும்பத்தோடு பெரிய செட்டித் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் ... மேலும் பார்க்க

மகளிர் விடுதிக்குள் நுழைந்து மாணவியை வன்கொடுமை செய்த மளிகைக்கடைக்காரர் - ஒடிசாவில் அதிர்ச்சி

ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் உள்ள கங்காபாடா என்ற இடத்தில் மளிகைக்கடை வைத்திருப்பவர் தீபக் பிரதான்(67). இவரது கடைக்கு அருகில் மகளிர் விடுதி ஒன்று இருக்கிறது. அடிக்கடி அவரது கடை வழியாக பெண்கள் மற்றும் மாண... மேலும் பார்க்க

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது?' - MTC பஸ் தகராறில் முதியவரை கொன்ற போதையில் இருந்த இளைஞன்

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது' என்று கேட்டு தகராறு ஆகி, சென்னையில் ஒரு கொலை நடந்துள்ளது.சென்னை தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் 25 வயதான இளைஞர் அமர்நாத் 70-G மாநகர பஸ்ஸில் ஏறியுள்ளார். அதே பஸ்ஸில் 74... மேலும் பார்க்க

மும்பையில் நள்ளிரவு டி.வி பார்ப்பதில் தகராறு: மனைவி, மகள், பேத்தியை கத்தியால் குத்திய முதியவர் கைது

மும்பை தானேயில் உள்ள ரபோடி கிராந்தி நகரில் வசிப்பவர் முகமது தாரிக் கான்(64). இவர் தனது மனைவி மற்றும் மகள், பேத்தியுடன் வசித்து வந்தார். சம்பத்தன்று முகமது தாரிக் கான் பேத்திக்கு பிறந்தநாள் ஆகும். இதனா... மேலும் பார்க்க