செய்திகள் :

பெர்சனல் லோன், தங்க நகைக் கடன், அடமானக் கடன், கிரெடிட் கார்டு - எதற்கு First Rank? | பணம் வளர்ப்போம்

post image

கோல்டு லோன், பெர்சனல் லோன், கிரெடிட் கார்டு என ஏகப்பட்ட கடன் வகைகள் இன்றைய உலகத்தில் உள்ளன.

ஆனால், எந்தத் தேவைகளுக்கு, எந்தக் கடன் வாங்கலாம் என்பதில் தான் கடன் கட்டுப்பாடு ரகசியமே அடங்கியிருக்கிறது.

அந்த ரகசியத்தைக் கூறுகிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வரதன்.

"வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஏகப்பட்ட கடன் பிராடக்டுகளை வைத்திருக்கின்றன. ஆனால், அதில் எது நமக்கு தேவை என்று பிரித்து பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

பெர்சனல் லோன்:

இந்தக் கடனைப் பொறுத்த வரை, எந்த அடமானமும் தேவையில்லை. வருமானத்தைப் பொறுத்து சற்று எளிதாக கிடைக்கும் கடன்.

மேலே சொன்னதில், 'சற்று எளிதாக' என்பதை நன்கு கவனியுங்கள். சற்று எளிதாக கிடைப்பதாலே, பலர் அளவுக்கு மீறி இந்தக் கடனை வாங்கி சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள்.

 விஷ்ணு வரதன்
விஷ்ணு வரதன்

ஆனால், இதில் வட்டி விகிதம் அதிகம் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

பெர்சனல் லோனை மருத்துவ செலவு, அவசர தேவைகள், குறுகிய கால நிதி தேவைகளுக்கு மட்டும் வாங்குங்கள். அதை முடிந்தளவு சரியாக... விரைவாக கட்டி முடிக்க பாருங்கள். இ.எம்.ஐ கட்டத் தவறினாலோ, கடனைக் கட்டி முடிக்க தாமதமானாலோ, இது ஒரு மிகப்பெரிய டிராப்.

இந்தக் கடனைப் பற்றி இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால், வேறு வழி இல்லையென்றால் மட்டும், இந்தக் கடனை வாங்குவது நல்லது.

தங்க நகைக் கடன்:

இது பெரும்பாலான தமிழ் குடும்பங்களில் அடிக்கடி வாங்கப்படும் ஒரு கடன். உடனடியான பணத் தேவைகளுக்கும், குறுகிய கால பண தேவைகளுக்கு மட்டும் இந்தக் கடனை வாங்குவது நல்லது.

இந்தக் கடனைப் பொறுத்த வரை, உடனே கிடைத்துவிடுவது, பெர்சனல் லோனை விட குறைவான வட்டி, பெரிய ஆவண வேலைகள் இல்லாமல் இருப்பது ப்ளஸ்.

நகைக் கடன்
நகைக் கடன்

அடமானக் கடன்:

ஏதேனும் ஒரு அசையா சொத்தை அடமானம் வைத்து வாங்கப்படுவது இந்தக் கடன். பெரிய நிதித் தேவைகள், பிசினஸ் முதலீடுகளுக்கு இந்தக் கடனை வாங்கலாம்.

குறைந்த வட்டி விகிதம்... ஆனால், அதிக கடன் தொகை என்பது இந்தக் கடனில் ப்ளஸ். ஆனால், இந்தக் கடனை கட்டத் தவறினால், நம் சொத்து அப்படியே நம் கையை விட்டு போய்விடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தேவை, திருப்பி செலுத்தக் கூடிய திறன், கடன் தொகையைப் பொறுத்தே எந்தக் கடன் யாருக்கு... எந்தச் செலவுக்கு நல்லது என்பதை முடிவு செய்ய முடியும்.

அப்படி பார்த்தால்...

குறுகிய கால தேவைகளுக்கு தங்க நகைக் கடன்;

பெரிய தேவைகளுக்கு அடமானக் கடன்;

அவசியம் என்றால் மட்டுமே பெர்சனல் லோன்;

கிரெடிட் கார்டு கடைசி ஆப்ஷன்.

இந்த வரிசையில் நாம் நம் கடன்களை முடிவு செய்யலாம்.

'இந்த' மூன்று தேவைகளா? தாராளமாக கடன் வாங்குங்கள்; இல்லையென்றால் வேண்டவே வேண்டாம் | பணம் வளர்ப்போம்

எதுவாக இருந்தாலும் நேரம், காலம் பார்த்து தான் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இது கடன் விஷயத்திற்கும் பொருந்தும். ஆம்... கடன் விஷயத்தில் நேரம், காலத்தோடு காரணத்தையும் சேர்த்துக்கொள்ள... மேலும் பார்க்க

சிம்லா முதல் சுவிட்சர்லாந்து வரை: உலகம் சுற்ற ஆசையா? முழு நிதித் திட்டமிடல் உள்ளே!

அதிகாலையில் கண் விழித்ததும் சமூக வலைதளங்களைத் திறக்கிறீர்கள். யாரோ ஒருவர் பனிபடர்ந்த மலையில் உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறார். இன்னொருவர் ஏதோ ஒரு தீவின் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தை ரசித்துக் கொண்டிர... மேலும் பார்க்க

Personal Finance: இன்றைய சந்தோஷத்தையும் நாளைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தணும்! என்ன செய்யணும்?

இன்றைய இளைஞர்களைப் பற்றி பேசும்போது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கருத்து என்னவென்றால்: “சம்பாதிக்கிறார்கள்… ஆனால் சேமிக்கவே மாட்டார்கள்!”இந்தக் கருத்து ஒரு அளவிற்கு உண்மையைக் கொண்டிருந்தாலும், அதனை முழும... மேலும் பார்க்க

உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? - 'இந்த' கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பது தான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இ... மேலும் பார்க்க

பணம் விஷயத்தில் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக பெற்றோர் இருப்பது எப்படி? | பணம் வளர்ப்போம்

குழந்தைகளின் எதிர்காலத்தின் நிதி திட்டமிடலை நாம் மட்டும் சரியாகச் செய்துவிட்டால் போதாது. எதிர்காலத்தைச் சிக்கல் இல்லாமல் கழிக்க நிதி திட்டமிடலை அவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எ... மேலும் பார்க்க

NRI Corner 11: வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களே, உஷார்! நீங்கள் சம்பாதிக்கும் பணம் இழப்பதற்கல்ல!

வளைகுடா நாட்டில் வசிக்கும் தமிழர் ஒருவருடன் சில நாள்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். ''கடந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்களில் பணத்தைப் போட்டுவிட்டேன். ஆனால், அத்தனையும் தவறானவை என்று இப்போதுதான... மேலும் பார்க்க