செய்திகள் :

பேஸ்புக்கில் மனைவி வெளியிட்ட சிமென்ட், டிரம் பதிவு; மனைவியை காதலனுடன் அனுப்பிய கணவன்- உ.பி அதிர்ச்சி

post image

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் முஸ்கான் என்ற பெண் கடந்த ஆண்டு தனது கணவனை காதலன் துணையோடு கொலைசெய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமென்ட்டால் நிரப்பிய சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து வடமாநிலங்களில் ஊதா கலர் டிரம் என்றாலே ஆண்கள் பயப்பட ஆரம்பித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊதா கலர் டிரம்மிற்கு பயந்து ஒருவர் தன்னுடைய மனைவியை அவர் காதலனுடன் அனுப்பி இருக்கிறார். அங்குள்ள புலந்த்ஷாஹர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.

இவர் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது. இது தொடர்பாக அடிக்கடி இருவருக்கும் சண்டை வருவதுண்டு. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராஜ்குமாருடன் சண்டை போட்டுக்கொண்டு அவர் மனைவி தன்னுடைய குழந்தையை அழைத்துக்கொண்டு, பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு அவரிடம் பேசி ராஜ் குமார் அழைத்து வந்தார்.

ஒவ்வொரு முறையும் இருவருக்கும் இடையே தகராறு வரும்போது, தனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம் என்று அவர் மனைவி கேட்பது வழக்கமாம்.

ஒரு முறை அவர் மனைவி தன்னுடைய காதலனுடன் போனில் பேசிக்கொண்டிருந்தார். அந்நேரம் போனை பிடுங்கிய ராஜ்குமார் அந்த போனை சோதனை செய்தபோது அதில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் சிமெண்ட், டிரம் என்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு ராஜ்குமார் படத்தையும் அவர் மனைவி பகிர்ந்து இருந்தார். அதனைச் சுட்டிக்காட்டி ராஜ் குமார், மனைவியிடம் தகராறு செய்தபோது, ஊதா கலர் டிரம்மிற்கு அனுப்பி விடுவேன் என்று மனைவி மிரட்டினார்.

இது குறித்து ராஜ்குமார் கூறுகையில், ''அவள் அடிக்கடி என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவாள். நான் அவளது போனை எடுத்த பிறகு, எங்கள் நான்கு பேரையும் (என்னையும் என் சகோதரர்களையும்) கொன்றுவிடுவேன் என்று அவள் சொன்னாள். அவள் எனக்கு சமைக்கவும் இல்லை. என் ஆடைகளை சுத்தம் செய்யவும் மாட்டாள். அவள் எங்கள் குழந்தையின் அழுக்கு துணிகளை தூக்கி எறிந்து விடுவாள். அவள் யாருடன் வாழ விரும்புகிறாள் என்று கேட்டபோது அவள் தன் காதலனுடன் வாழப்போவதாக தெரிவித்தாள்" என்றார்.

இது குறித்து ராஜ்குமார் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ராஜ்குமார் மனைவி தன்னுடைய காதலனுடன் வாழப்போவதாகத் தெரிவித்தார். உடனே அவர் காதலனை வரவழைத்தனர். ராஜ்குமாரும் மனைவி தன் நபருடன் சென்று வாழ்வதற்கு சம்மதம் தெரிவித்து, அவரை அனுப்பி வைத்தார்.

சேற்றுத்தண்ணீரில் மிதந்தபடி ப்ரீ வெடிங் போட்டோஷூட்; `இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்' நெட்டிசன்கள் ட்ரோல்

திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் புகைப்படக் கலைஞரை வரவழைத்து விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். இது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு தம்பதி செய்த காரியம் இ... மேலும் பார்க்க

திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது மட்டும் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால் ஈரான் அண்டை நாட... மேலும் பார்க்க

தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் : போராடி ஏலத்தில் விற்பனை செய்து முடித்த மத்திய அரசு!

மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய தாவூத் இப்ராகிம் இப்போது தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். அவனுக்கும், அவனது குடும்பத்திற்கும் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் ரத்னகி... மேலும் பார்க்க

VanDyke : கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி; மர்மம் நிறைந்த கதைகள்! இந்தியாவில் சிக்கிய அமெரிக்கர் யார்?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி உட்பட இரண்டு இடங்களில் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டதாகவும், இந்தியாவில் உளவு பார்த்ததாகவும் 6 உக்ரைன் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். அவர்களோடு அமெரிக்காவை சேர்ந... மேலும் பார்க்க

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அறிமுகப்படுத்துகிறது ஸ்வர்ண யுகாதி! - தங்கத்தின் பிரகாசமான புதிய தொடக்கம்!

1964 முதல் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், தலைமுறைகளை கடந்து வந்த நம்பிக்கையின் சின்னமாக திகழ்கிறது. நுணுக்கமான கைவினைத் திறனும், நிலையான மதிப்புகளுக்கு காரணமாக புகழ்பெற்ற இந்த நிறுவனம்.... மேலும் பார்க்க

`உறுதிப்பத்திரம் கொடுத்தால்தான் அனுமதி' - கேதார்நாத் வரும் இந்து அல்லாதவர்களுக்கு புது கட்டுப்பாடு

இந்துக்களின் புனித இடங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கு வரும் இந்துக்கள் அல்லாத பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. அதன்படி,இந்து அல்லாதவர்கள் பத்ரிநாத் மற்றும... மேலும் பார்க்க