செய்திகள் :

பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சீரற்ற இதயத் துடிப்பு! - முதியவரின் உயிரை மீட்ட சிம்ஸ் மருத்துவமனை

post image

தொடர்ச்சியான சீரற்ற இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த, ஐந்து நாட்களில் 250-க்கும் மேற்பட்ட முறை 'டிஃபிபிரிலேட்டர்' மின் அதிர்ச்சிகள் இந்நோயாளிக்கு தேவைப்பட்டன.

சமீபத்தில் அதிக ஆபத்தான இதயநாள பைபாஸ் சிகிச்சை இரண்டாவது முறையாக செய்யப்பட்டிருந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான இதயக் கீழறை மிகைத்துடிப்பு பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க சிக்கலான கதீட்டர் அப்லேஷன் செயல்முறையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இந்த இரு சிகிச்சை செயல்முறைகளுமே தொழில்நுட்ப ரீதியில் அதிக சவாலானவை. 

சிக்கலான இரண்டாவது பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உயிருக்கு ஆபத்தான சீரற்ற இதயத் துடிப்பால் (VT) பாதிக்கப்பட்ட 65 வயது முதியவரின் உயிரை சிம்ஸ் மருத்துவமனை காப்பாற்றியுள்ளது. இந்த அபாயகரமான துடிப்பைக் கட்டுப்படுத்த ஐந்து நாட்களில் சுமார் 250 முறை அவருக்கு மின் அதிர்ச்சிகள் அளிக்கப்பட்டன. பின்னர், இதயத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் செய்யப்பட்ட சிக்கலான 'அப்லேஷன்' சிகிச்சை மூலம் அவர் குணமடைந்தார். மீண்டும் பிரச்சினை வராமல் தடுக்க, 'ஏஐசிடி' (AICD) என்ற கருவியும் அவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நோயாளிக்கு 2012-ஆம் ஆண்டே வேறு மருத்துவமனையில் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில் அவருக்குத் தொடர் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பரிசோதனையில், பழைய பைபாஸ் சிகிச்சையில் சரிசெய்யப்பட்ட இரத்தக் குழாய்கள் தற்போது செயலிழந்திருப்பதும், இதயத்தின் இரத்தத்தை உந்தித் தள்ளும் திறன் 27% ஆகக் குறைந்திருந்ததும் தெரியவந்தது. மேலும், இதயத்தின் குழாய்களில் பல அடைப்புகளும் இருந்தன.

இதயத்தின் இரத்த ஓட்டம் கடுமையாகக் குறைந்திருந்ததால், சிம்ஸ் மருத்துவமனையின் இதய சிகிச்சைப்பிரிவு இயக்குநர் டாக்டர் வி.வி. பாஷி தலைமையிலான மருத்துவக் குழுவினர், மிகவும் சவாலான இரண்டாவது பைபாஸ் அறுவை சிகிச்சையை இந்நோயாளிக்கு வெற்றிகரமாகச் செய்தனர்.

அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்தில், நோயாளியின் இதயக் கீழறைகளில் இருந்து மிக வேகமான சீரற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டது. இது மருந்துகளுக்குக் கட்டுப்படவில்லை. வழக்கமாக இது 48 மணி நேரத்தில் சரியாகிவிடும்; ஆனால், இவருக்கு 5 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்தது. 'விடி ஸ்டார்ம்' எனப்படும் இந்த ஆபத்தான நிலையைக் கட்டுப்படுத்த, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து நாளொன்றுக்கு 50 முறை வீதம் மொத்தம் 250 முறை மின் அதிர்ச்சிகள் அளித்து மருத்துவர்கள் அவர் உயிரைக் காப்பாற்றியிருக்கின்றனர்.

நவீன 'அப்லேஷன்' சிகிச்சை: இதனைத் தொடர்ந்து, எலக்ட்ரோபிசியாலஜி பிரிவுத் தலைவர் டாக்டர் சஞ்சய் பி.வி. தலைமையிலான குழுவினர், சீரற்ற மின் சிக்னல்களைக் கண்டறிந்து சரிசெய்யும் 'அப்லேஷன்' சிகிச்சையை மேற்கொண்டனர். நுண்-துளை மூலம் குறைந்த ஊடுருவல் முறையில் இதயத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பிரச்சினை முழுமையாகச் சரிசெய்யப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி 15 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவு உட்பட ஒரு மாதம் மருத்துவமனையில் தங்கி குணமடைந்தார். திடீர் மாரடைப்பு எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க ஒரு மாதம் கழித்து, அவருக்கு 'ஏஐசிடி' (AICD) கருவி பொருத்தப்பட்டது. இது இதயத் துடிப்பைக் கண்காணித்து, சீரற்ற துடிப்பு ஏற்பட்டால் தானாகவே மின் அதிர்ச்சியை வழங்கி பாதுகாக்கும். தற்போது அவர் முழு நலமுடன் உள்ளார்.

டாக்டர் வி.வி. பாஷி கூறுகையில், "இதயம் பலவீனமாக உள்ளவர்களுக்கு இரண்டாவது முறையாக பைபாஸ் சிகிச்சை செய்வது மிகவும் சிக்கலானது. அதற்கு பிறகு சீரற்ற இதயத்துடிப்பு தொடர்ச்சியாக இருந்த பிரச்சனைக்கு 5 நாட்களில் 250 முறை மின் அதிர்ச்சிகள் அளிக்கப்பட்டு ஒரு நோயாளி முழுமையாகக் குணமடைந்திருப்பதை நான் காண்பது, எனது 45 வருட மருத்துவ அனுபவத்தில், இதுவே முதல்முறை" என்றார்.

டாக்டர் சஞ்சய் கூறுகையில், "அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட உயிருக்கு ஆபத்தான 'விடி ஸ்டார்ம்' பாதிப்பை, நவீன 3D மேப்பிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இதயத்தின் இருபுறமும் சிகிச்சை அளித்ததன் மூலம் வெற்றிகரமாகச் சரிசெய்தோம்" என்றார்.

பன்மொழி மெய்நிகர் விற்பனை AI உதவியாளர் - அறிமுகம் செய்த DRA ஹோம்ஸ்!

சமீபத்தில் முடிவடைந்த CREDAI சென்னை ஃபேர்ப்ரோ கண்காட்சியில், நகரின் முதல் பன்மொழி மெய்நிகர் விற்பனை AI உதவியாளரை DRA ஹோம்ஸ் அறிமுகப்படுத்தியதன் மூலம், சென்னையின் ரியல் எஸ்டேட் துறை ஒரு குறிப்பிடத்தக்க... மேலும் பார்க்க

ஸ்கூட்டர் டிக்கிக்குள் பச்சிளம் குழந்தை - பேரதிர்ச்சியூட்டும் தாயின் செயல்.. கொதிக்கும் இணையவாசிகள்!

மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் அரங்கேறியுள்ள இந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம், ஒட்டுமொத்த இணையதளத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு தாய் தன்னுடைய பச்சிளம் குழந்தையை ஸ்கூட்டரின் இருக்கைக்... மேலும் பார்க்க

ரத்தன் டாடா வாழ்ந்த வீடு; ரூ.17.6 லட்சம் வாடகைக்கு விட்ட டாடா நிறுவனம் - நோயல் டாடா குடியேற முடிவு?

தொழிலதிபர் ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு தென்மும்பையில் 3 மாடிகள் கொண்ட பக்தவார் என்ற கட்டடத்தில் வசித்து வந்தார். இக்கட்டடம் மும்பை கொலாபா பகுதியில் இருக்கிறது. 1... மேலும் பார்க்க

Elon Musk house: 400 சதுர அடி வீடுதான்; தாய் தங்குவதற்குகூட இடமில்லை; வியக்கவைக்கும் மஸ்க்கின் எளிமை

உலகின் நம்பர் 1 பணக்காரர் என்றால், கோல்டன் கேட்கள், டஜன் கணக்கான படுக்கையறைகள் மற்றும் பிரமாண்ட நீச்சல் குளங்கள் கொண்ட அரண்மனையில்தான் வாழ்வர் என்று நாம் நினைப்போம். ஆனால், எலான் மஸ்க் அனைத்தையும் தலை... மேலும் பார்க்க

`எனது மகளுக்கு திருமணம்' - மார்க்கெட்டில் கொத்தமல்லியை விற்பனை செய்ய முடியாமல் கதறி அழுத விவசாயி

விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்று கூறுவதுண்டு. மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது விளைபொருள் விற்பனை செய்யப்படாமல் போனதால் கதறி அழுத காட்சி சமூக வலைத்தள பக்கத்தி... மேலும் பார்க்க

கும்பமேளா வைரல் பெண் மோனலிசா.! கேரளாவில் காதல் திருமணம்! பின்னணி என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற இளம் பெண் கும்பமேளாவில் பாசிமணி விற்பனை செய்தபோது தனது வசீகர புன்னகையாலும், காந்த கண்களாலும் வைரலானார். பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள... மேலும் பார்க்க